ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.,, இனி கால் கடுக்க நிக்க வேணாம்.,புதிய வசதியை அறிமுகம் செய்த நிர்வாகம்!!

0
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.,, இனி கால் கடுக்க நிக்க வேணாம்.,புதிய வசதியை அறிமுகம் செய்த நிர்வாகம்!!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.,, இனி கால் கடுக்க நிக்க வேணாம்.,புதிய வசதியை அறிமுகம் செய்த நிர்வாகம்!!

ரயில் பயணிகள் பயன் பெரும் விதமாக பல நல்ல திட்டங்களை இந்திய ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது முக்கிய அறிவிப்பு ஓன்று வெளியாகி இருக்கிறது.

ரயில்வே நிர்வாகம்:

இந்திய ரயில்வே நிர்வாகம் யுடிஎஸ் செல்லிடப்பேசி வசதியை கடந்த 2014ம் ஆண்டு அறிமுகப் படுத்தியது. மேலும் இந்த யுடிஎஸ் செயலி மூலம் முன்பதிவில்லா டிக்கெட்டுகள் எடுப்பதில் பல கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. தற்போது அதில் தளர்வுகள் அளித்து புதிய வசதியை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, புறநகர் ரயில் பயணிகள் டிக்கெட் எடுப்பதற்கு 5 கிலோமீட்டர் தொலைவுக்குள் இருக்க வேண்டும் மற்றும் புறநகர் அல்லாத பகுதிகளில் டிக்கெட் எடுப்பதற்கு பயணிகள் 2 கிலோமீட்டருக்குள் இருக்க வேண்டும் என்பதுதான் இதுவரை இருந்த கட்டுப்பாடுகள்.

வாகை சூடிய ஈஸ்ட் பெங்கால்.,சென்னைக்கு எதிராக மும்பை சிட்டி அணி…, சொந்த மண்ணில் பலப்பரீட்சை!!

இந்நிலையில் இதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு 5 கிலோ மீட்டர் தூரமானது 20 கிலோமீட்டர் ஆகவும், 2 கிலோமீட்டர் தூரமானது 5 கிலோமீட்டர் ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த புதிய வசதியானது, கடந்த 7ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதையடுத்து இந்த தளர்வு பயணிகளுக்கு சிரமத்தை குறைக்கவும், பேப்பர் யூஸேஜை குறைக்கவும் அறிவிக்கப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் டிக்கெட் பெறுவதற்கான ஆப்-ஐ Google Play Store லிருந்து டவுன்லோடு செய்து, அதில் பயணிகள் தங்கள் சுயவிவரத்தை ரெஜிஸ்ட்டர் செய்து கொள்ள வேண்டும். அடுத்து செல்போன் நம்பரை கர்ன்பாரம் செய்வதற்கு OTP வரும், அதை உள்ளிட்டால் LOG-IN செய்வதற்கான User ID, Password ஆகியவை வழங்கப்படும். இதன் மூலம் பயணிகள் டிக்கெட்டுக்காக நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here