சைலன்டாக வாரிசு, துணிவு சாதனைகளை பீட் செய்யும் தனுஷ்., இது சும்மா ட்ரைலர் தான், ஆட்டமே இனி தான் ஆரம்பம்!!

0
சைலன்டாக வாரிசு, துணிவு சாதனைகளை பீட் செய்யும் தனுஷ்., இது சும்மா ட்ரைலர் தான், ஆட்டமே இனி தான் ஆரம்பம்!!
சைலன்டாக வாரிசு, துணிவு சாதனைகளை பீட் செய்யும் தனுஷ்., இது சும்மா ட்ரைலர் தான், ஆட்டமே இனி தான் ஆரம்பம்!!

நடிகர் தனுஷ் நடித்த வாத்தி திரைப்படத்தில் இடம்பெற்ற நாடோடி மன்னன் பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் இப்பாடலை குறித்து ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

வாத்தி திரைப்படம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகர் பாடகர் பாடலாசிரியர் இயக்குனர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் தான் நடிகர் தனுஷ். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வாத்தி. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லீரி இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அண்மையில் இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் வா வாத்தி பாடல் வெளியாகி பட்டி தொட்டி எல்லாம் ரீச் ஆனது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதுமட்டுமின்றி வா வாத்தி பாடல் பல இளைஞர்களின் மொபைல் போனில் ரிங் டோன் ஆக ஒலித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி நாடோடி மன்னன் என்ற பாடலின் லிரிக்ஸ் வீடியோ படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த நிலையில் இப்பாடலை குறித்து ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

டிஆர்பி காக சன் டிவியின் மாஸ்டர் பிளான்.,10 ஆண்டுக்கு முன் இருந்த அந்த நிகழ்ச்சியை கொண்டு வர முடிவு!!

அந்தப் பதிவில், நாடோடி மன்னன் பாடல் வெளியான மூன்று நாட்களில் 100k லைக்குகளையும், 4 மில்லியன் வியூஸ் களையும் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த தகவலை அறிந்த தனுசு ரசிகர்கள் சந்தோசத்தில் ஆர்ப்பரித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் ஆயிரத்தில் ஒருவன் 2 மற்றும் கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here