“இனி ODI அவ்வளவுதா…, எதிர்வரும் காலம் T20 & T10 ஆதிக்கம் தான் இருக்கும்”…, இந்திய வீரர் ஓபன் டாக்!!

0
"இனி ODI அவ்வளவுதா..., எதிர்வரும் காலம் T20 & T10 ஆதிக்கம் தான் இருக்கும்"..., இந்திய வீரர் ஓபன் டாக்!!

உலக அளவில் பல்வேறு லீக் தொடர்கள் நடைபெற்று வரும் இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா ஒருநாள் போட்டிகள் குறித்து சில கருத்துக்களை கூறியுள்ளார்.

ராபின் உத்தப்பா:

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி, ஹைதரபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில், இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஒருநாள் போட்டியை, காண வந்த பார்வையாளர்களின் வழக்கத்தை விட குறைவாக இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, ஒருநாள் போட்டிகளுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை மேலும் குறைய அதிக வாய்ப்பு உள்ளது. தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும், டி20 லீக் போட்டியை அதிகம் விருப்புவார்களாக உள்ளனர். இந்த நிலை மாறி, டி10 லீக்கும் கிரிக்கெட் தொடர்களில் ஆதிக்கம் செலுத்தும் என்று கூறியுள்ளார்.

IND vs NZ: நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி அபராதம்!!

இதற்கு முன், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் தொடரில் இருந்து மட்டும் விலகுவதாக கூறிய போது, ஒருநாள் போட்டிகள் அழிவை எதிர்நோக்கி நகர்வதாக கருத்துக்கள் பரவி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ராபின் உத்தப்பா கூறுவது, ஒருநாள் தொடரின் இடத்தை பிடித்த டி20 பிடித்தது போல, டி10 லீக்குகள் டி20 இடத்தை விரைவில் பிடிக்கும் என்பது போல் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here