“தல” அஜித் பைக்கில் 10 ஆயிரம் கிலோமீட்டர் கடந்து சாதனை – சக ரைடர் புல்லரிப்பு!!

0

நடிகர் அஜித் குமார் ஒரு வெறித்தனமான பைக் ரைடர் என்று அவரது சக பைக் ரைடரான தினேஷ் தெரிவித்துள்ளார். தற்போது நடிகர் அஜித் வட மாநிலங்களில் 10 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.

அஜித்தின் வலிமை திரைப்படம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் தான், “தல” அஜித் குமார். இவர் ஒரு வெறித்தனமான பைக் ரைடர் என்று அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால், அவர் குறித்த சுவாரசிய தகவல்களை அவரது சக பைக் ரைடரான தினேஷ் தெரிவித்துள்ளார்.

தற்போது வலிமை திரைப்படத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரசாரமான ஆம்பூர் சிக்கன் கிரேவி ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

படப்பிடிப்பு வட மாநிலங்களான உத்தர பிரதேஷ் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. படப்பிடிப்புகள் தற்போது கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில் நடிகர் அஜித் தனக்கு பிடித்தமான பைக் ரைடிங்கில் ஈடுபட்டு வந்துள்ளாராம். அவர் சிக்கிம் போன்ற பகுதிகளுக்கு சென்று இன்னும் சில தினங்களில் சென்னை திரும்புவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது குறித்து அவரது சக பைக் ரைடரான தினேஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “நடிகர் அஜித்திற்கு தனிமை தான் மிகவும் பிடிக்கும். அதனால் நான் அவரை மதிக்கிறேன்”

“அவர் ஒரு வெறித்தனமான பைக் ரைடர். அவர் தனது குழுவுடன் 10 கிலோமீட்டர் பயணத்தை பைக்கில் சென்று சாதித்துள்ளார்” இவ்வாறாக தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்துடன் எடுத்து கொண்ட புகைப்படத்தினையும் அவர் பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here