ஆன்லைன் கேமினால் ஏற்பட்ட பரிதாபம் – புதுச்சேரி மாணவன் உயிரிழப்பு!!

0

புதுச்சேரியில் 16 வயது பள்ளி மாணவன் ஒருவன் தொடர்ச்சியாக 4 மணி நேரம் போனில் ஆன்லைன் கேம் விளையாடியுள்ளான். இதன் விளைவாக மயங்கி விழுந்த அந்த மாணவன் பரிதாபமாக உயிர் இழந்துள்ளான். இந்த சம்பவம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆன்லைன் கேம்:

தற்போதைய காலத்தில் சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் என அனைவரும் போன் மூலம் விளையாடும் ஆன்லைன் கேமில் தான் மூழ்கி கிடக்கிறார்கள். சிலர் இதன் மூலம் உடல் நலம் பாதிக்கப்படுகின்றனர். சிலர் இதன் மூலம் நிறைய பணத்தை இழக்கின்றனர். சிலர் பரிதாபமாக தனது உயிரை இழக்கின்றனர். இதனை தடுக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் அதனை முழுவதுமாக தடுக்க முடியவில்லை. மேலும் கடந்த லாக்டவுன் காலத்தில் இவை அனைத்தும் அதிகரித்து தான் உள்ளது. தற்போது இதேபோல் ஓர் சம்பவம் புதுச்சேரியில் நிகழ்ந்துள்ளது. புதுச்சேரியில் வில்லியனுர் அருகேயுள்ள மணவெளியை சேர்ந்தவன் தான் தர்ஷன்.

தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும் – சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் உரை!!

இவனுக்கு 16 வயது. இவன் தனது போனில் தொடர்ச்சியாக 4 மணி நேரம் காதில் ஹெட்போனுடன் கேம் விளையாடி உள்ளான். இதன் விளைவாக இவன் மயங்கி விழுந்துள்ளான். பின்பு பரிதாபமாக தனது உயிரை இழந்துள்ளான். இந்த சம்பவம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுபோல் சம்பவம் இனி அரங்கேறாமல் இருப்பதற்கு பெற்றோர்கள் தான் கவனமாக தங்களது பிள்ளைகளை கவனித்து வர வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here