ஆலியா மானசா செய்த குதர்க்கமான செயல்.., கழட்டி விட்ட விஜய் டிவி.., கடைசியில் கைகொடுத்தது அது ஒன்னு தான்!!

0
ஆலியா மானசா செய்த குதர்க்கமான செயல்.., கழட்டி விட்ட விஜய் டிவி.., கடைசியில் கைகொடுத்தது அது ஒன்னு தான்!!
ஆலியா மானசா செய்த குதர்க்கமான செயல்.., கழட்டி விட்ட விஜய் டிவி.., கடைசியில் கைகொடுத்தது அது ஒன்னு தான்!!

சின்னத்திரையில் முன்னணி நடிகையாக இருக்கும் ஆலியா மானசா பற்றிய புதிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆலியா மானசா:

மானாட மயிலாட நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு அதன் மூலம் விஜய் டிவியில் கால் எடுத்து வைத்தவர் தான் நடிகை ஆலியா மானசா. முதல் சீரியல் அவருக்கு டாப் லெவலில் ஹிட் கொடுத்தது. மேலும் சஞ்சீவையே திருமணமும் செய்து கொண்டார். ரீல் ஜோடிகள் ரியல் ஜோடியாகும் கான்செப்ட்டை ட்ரெண்டிங் ஆக்கிவிட்டது இந்த ஜோடி தான். மேலும் பிறகு குழந்தை பிறந்த பிறகு ஆலியா ராஜா ராணி பார்ட் 2 சீரியலில் நடித்து வந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

சீரியல் நன்றாக போய்க்கொண்டு இருக்கும் நேரத்தில் மறுபடியும் கர்ப்பமாக ராஜா ராணி சீரியலை விட்டு விலகி விட்டார். இப்பொழுது அர்ஷ்க்கு ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் ஆலியா மானசா மீண்டும் சீரியலில் களமிறங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியது. அது உறுதி படுத்தும் விதத்தில் இப்பொழுது எந்த சேனல் என்ற விவரம் வெளி வந்துள்ளது. அதாவது ஆலியா மானசா சன் டிவியில் சீரியலில் நடிக்க இருக்கிறார்.

வாடகைத்தாய் சர்ச்சையை மீண்டும் கிளப்பிவிட்ட விஜய் டிவி.., கடைசியில நயனை வச்சு செஞ்சுட்டிங்களே!!

ஆனால் அவருக்கு ஹீரோ யார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. சஞ்சீவ் சன் டிவி கயல் சீரியலில் நடித்துவரும் நிலையில் இப்போது இவரும் சன் டிவியில் குதித்து விட்டார். விஜய் டிவி அளவுக்கு சன் டிவி சீரியல் கை கொடுக்குமா என்று கேட்டால் அது சந்தேகம் தான். மேலும் விஜய் டிவி சீரியல்களில் இருந்து விலகியதால் அடுத்தடுத்து வாய்ப்பு கொடுக்கவில்லை என்றும் பேச்சு அடிபட்டு வருகிறது. சன் டிவிலாவது தாக்குப் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here