T20 உலக கோப்பையை மிஞ்சிய FIFA…, ஒரு தொடருக்கு இவ்வளவு கோடியா??

0
T20 உலக கோப்பையை மிஞ்சிய FIFA..., ஒரு தொடருக்கு இவ்வளவு கோடியா??
T20 உலக கோப்பையை மிஞ்சிய FIFA..., ஒரு தொடருக்கு இவ்வளவு கோடியா??

டி20 உலகக் கோப்பைக்கான பரிசு தொகையை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள், FIFA உலக கோப்பைக்கான பரிசு தொகையை கேட்டால் இந்த முடிவுக்குத்தான் வருவார்கள் என தகவல் வெளியாகி வருகிறது.

உலக கோப்பை:

உலக அளவில் பல்வேறு விளையாட்டு தொடர்கள் மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூட கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்றது. இதற்கு முன், பல்வேறு நகரங்களை மையமாக கொண்டு, பிரெஞ்சு ஓபன், யூ எஸ் ஓபன் உள்ளிட்ட டென்னிஸ் தொடர்களும் நடந்து முடிந்தன.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த வகையில், வரும் 20ம் தேதி முதல் FIFA சார்பாக உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடைபெற இருக்கிறது. 32 அணிகள் பங்குபெற இருக்கும் இந்த தொடர் குறித்து எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்நிலையில், உலக அளவில் நடத்தப்படும் தொடர்களுக்கான பரிசு தொகை குறித்த தகவல் ஒன்று வெளியானது.

ஒருநாள் உலக கோப்பை 2023: இந்தியா பட்டத்தை வெல்ல பிசிசிஐ போட்ட பிளான்…, வெளியாகிய அப்டேட்!!

இதில், டி20 உலகக் கோப்பைக்கு 45 கோடி, பிரெஞ்சு ஓபனுக்கு 380 கோடி, விம்பிள்டன் 399 கோடி மற்றும் யூஎஸ் ஓபன் 489 கோடி என தொடர்கள் அனைத்தும் கோடியிலேயே உள்ளது. இந்த தொகை அனைத்தையும் சேர்த்தால் கூட FIFA உலக கோப்பை கால்பந்து தொடருக்கான பரிசு தொகையை நெருங்க முடியாது. இந்த ஒரு தொடருக்கு மட்டும் 3587 கோடி ரூபாய் பரிசு தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த சிலர், நம்மளும் கால்பந்து வீரராக மாறிடலாம் என்ற முடிவுக்கு தான் வருவார்கள் என்று தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here