வித்தியாசமான கதைக்களத்தில் இறங்கி இருக்கும் அதர்வா..,  “பட்டத்து அரசன் ” படத்தின் ட்ரைலர் வெளியீடு!!

0
வித்தியாசமான கதைக்களத்தில் இறங்கி இருக்கும் அதர்வா..,  
வித்தியாசமான கதைக்களத்தில் இறங்கி இருக்கும் அதர்வா..,  "பட்டத்து அரசன் " படத்தின் ட்ரைலர் வெளியீடு!!

நடிகர் அதர்வா நடித்த பட்டத்து அரசன் படத்தின் டிரைலர் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

நடிகர் அதர்வா:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக நிலைத்து நிற்பவர் தான் நடிகர் அதர்வா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ட்ரிகர் திரைப்படம் மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.  இதனை தொடர்ந்து அட்ரஸ், ஒத்தைக்கு ஒத்த, நிறங்கள் மூன்று போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில்  களவாணி, வாகை சூட வா போன்ற ஹிட் படங்களை இயக்கிய சற்குணம் படைப்பில் உருவான பட்டத்து அரசன் என்ற திரைப்படத்தில் அதர்வா நடித்துள்ளார். இது போக நடிகர் ராஜ்கிரண், ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில்  இப்படத்தில் இடம்பெற்ற  “யாரோ யாரோ இவ” என்ற பாடலை சிங்கிள் ட்ராக் முறையில் வெளியிட்டனர்.
தற்போது இப்படத்தை குறித்து ஒரு முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் ராஜ்கிரன், அதர்வாவும் சேர்ந்து நடித்த இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. படு மாசாக இருக்கும்  ட்ரைலரை பார்த்து ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றன. மேலும் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here