சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி இல்லை.,, வாபஸ் பெறப்பட்ட கைப்புத்தகம்!!

0
சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி இல்லை.,, வாபஸ் பெறப்பட்ட கைப்புத்தகம்!!
சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி இல்லை.,, வாபஸ் பெறப்பட்ட கைப்புத்தகம்!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி இல்லை என்று கேரள அரசு அறிவித்துள்ளது.

அனுமதி இல்லை:

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, நேற்று முன்தினம் (மாலை ) திறக்கப்பட்டதை முன்னிட்டு நேற்று முதல் ஐயப்பன் கோவில்களுக்கு பக்தர்கள் வர தொடங்கியுள்ளனர். கொரோனா காரணமாக கடந்த சில வருடங்களில், கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் இந்த வருடம் எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இல்லாமல் மன நிறைவுடன் ஐயப்பனை பக்தர்கள் தரிசனம் செய்ய முக்கிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் கடந்த 2018ல் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கேரளா அரசு போலீசாருக்கு நேற்று வழிகாட்டு நெறிகள் அடங்கிய புத்தகம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து ஒரு சில மணி நேரத்தில், வழிகாட்டு நெறிகளை அச்சிட்டதில் தவறு ஏற்பட்டுள்ளது. அதனால் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை அரசு வாபஸ் வாங்குகிறது, ஏற்கனவே இருந்த பழைய நடைமுறையே தொடரும் என்று கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஆலியா மானசா செய்த குதர்க்கமான செயல்.., கழட்டி விட்ட விஜய் டிவி.., கடைசியில் கைகொடுத்தது அது ஒன்னு தான்!!

அதாவது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் தான் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தவறுதலாக வழிகாட்டு நெறிமுறைகள் அச்சிடப்பட்டு போலீசுக்கு வழங்கப்பட்ட கைப்புத்தகம் திரும்ப பெறப்பட்டு, தவறுகள் திருத்தப்பட்டு மீண்டும் புதிதாக அச்சடிக்கப்பட்ட புத்தகம் வழங்கப்படும் என்று கேரள சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அஜித் குமார் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here