குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்த ஷிவாங்கி தற்போது அஜித் ரசிகர்கள் பலரையும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளார். ஷிவாங்கிக்கு ஆதரவாக பதிவிடும் ரசிகர்கள்.
ஷிவாங்கி:
சூப்பர் சிங்கரில் அறிமுகமாகி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் ரீச் ஆனவர் ஷிவாங்கி. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்த ஷிவாங்கி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவரது குழந்தைத்தனமான செயல்கள் மூலம் ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளார்.
நேர்காணலில் விஜய் நடித்த கடைசி படம் எது என கேட்டதற்கு மாஸ்டர் என்று சரியாக கூறிய ஷிவாங்கி தல அஜித் அவர்களின் கடைசியாக வந்த திரைப்படம் எது என கேட்டதற்கு விவேகம் வேதாளம் என கூறினார். அதேபோல அவரின் படம் வரப்போதே அடிக்கடி அப்டேட் கேப்பாங்களே என கூறி சிரித்த வீடியோ வைரலாகிட்டு இருக்கு.
ஷிவாங்கி இந்த மாதிரி சொன்னதால ரசிகர்கள் பலர் அதிருப்தியில் இருகாங்க. ஏற்கனவே அப்டேட் இளமை ஏங்கி தவிக்கும் ரசிகர்களுக்கு இவரது கேளிக்கை பேச்சு ஆத்திரப்படுத்தியிருந்தாலும், அவங்க குழந்தை மாதிரி அதனால இந்த வீடியோவை ஷேர் பண்ணாதீங்கனு சமூக வலைத்தளங்களில் ஆதரவு அதிகரித்து வருகிறது.