போலீசாரிடம் பாம்பை ஆவணமாக காட்டிய வாலிபர் – கர்நாடகாவில் நடந்த வினோத சம்பவம்!!

0

கர்நாடகாவில் கொரோனா நோய்பரவல் காரணமாக ஊரடங்கு நடவடிக்கை கடுமையாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த பகுதியில் ஓர் இளைஞர் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா:

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா நோய்த்தொற்று காரணமாக பல மாநிலங்களில் முழு நேர ஊரடங்கு மற்றும் பகுதி நேர ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் யாரும் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க காவல்துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு நடவடிக்கை அமலுக்கு வந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அங்கு தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருவதால் அங்கு பல நடவடிக்கைகள் மிக கடுமையாக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் உரிய ஆவணத்துடன் மக்கள் வெளியே செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மைசூர் மாளிகை அருகே இளைஞர் ஒருவர் வெளியே சுற்றி திரிந்தார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

கொரோனா பரவலுக்கு மத்தியில் மின் கட்டணம் உயர்வு – அரசு அதிரடி!!

அவரை மடக்கிய போலீசார் அவரிடம் எதற்கு வெளியே வந்தாய் என்றும் அதற்கான ஆவணத்தை காண்பிக்குமாறு அறிவுறுத்தினார். அந்த இளைஞனோ குடியிருப்புகளில் ஒருகுந்து விடும் பாம்பினை பிடிக்கும் வீரர். ஆகையால் வேறு வழியின்றி தனது வாகனத்தில் இருந்து ஐந்தடி நீல நல்ல பாம்பினை ஆவணமாக எடுத்து போலீசாரிடம் காட்டியுள்ளார். இதனை பார்த்த போலீசார் அலறினர். தற்போது இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here