கில்லி பட காமெடி நடிகர் திடீர் கொரோனாவால் மரணம் – சோகத்தில் திரையுலகம்!!

0

கில்லி படத்தில் ஆதிவாசி கேரக்டரில் நடித்த நடிகர் மாறன் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு தற்போது உயிர் இழந்துள்ளார்.

திரைப்பட நடிகர் மாறன்:

இவர் கடந்த 2000ம் ஆண்டு வெளியான வேதம் திரைப்படத்தில் அறிமுகமாகி, 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளி வந்த கில்லி திரைப்படத்தில் ஆதிவாசி கேரக்டரில் நடித்து அசத்தியுள்ளார். தற்போது நடிகர் மாறனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கடந்த 2 நாட்களுக்கு முன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

48 வயதே ஆன மாறன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.  நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா நேற்று மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் தற்போது  கொரோனா தொற்றால் நடிகர் மாறன் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் அடுத்தடுத்து கொரோனாவுக்கு உயிரிழந்ததை அடுத்து இன்று மேலும் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here