இந்தியாவில் தற்போது சிகிச்சையில் 37,04,099 பேர் உள்ளனர் – சற்று முன் வெளியான தகவல் !!!

0

இந்தியாவில் தற்போது சிகிச்சையில் 37,04,099 பேர் உள்ளனர் – சற்று முன் வெளியான தகவல் !!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,48,421 நபர்கள் கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,55,338 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா தொற்று 4 லட்சத்திற்கும் கீழ் பதிவாகி உள்ளது.

மத்திய சுகாதார அமைச்சக தகவல்

கோவிட் பெருந்தொற்றால் நாளொன்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கையில் தற்போது கர்நாடகா முதலிடத்திலும், மகாராஷ்டிரா 2ம் இடத்திலும், தமிழகம் 3ம் இடத்திலும் உள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. எனவே காலங்களில் மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் கோவிட் பெருந்தொற்றால் நாளொன்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப் படி, கடந்த 24 மணி நேரத்தில் 3,48,421 புதிய # COVID19 வழக்குகள் பதிவாகியுள்ளது, 3,55,338பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர் மற்றும் 4205 இறப்புகள் பதிவாகி இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது வீடுகளிலும் மருத்துவமனைகளிலும் சிகிச்சையில் 37,04,099 பேர் உள்ளனர். 1,93,82,642 நபர்கள் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,54,197 இறப்புகள் இதுவரை இந்தியாவில் பதிவாகியுள்ளது.

மொத்த வழக்குகள் மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  மொத்த இறப்பு எண்ணிக்கை
2,33,40,938 1,93,82,642 2,54,197
இந்தியாவில் தற்போது சிகிச்சையில்
சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை  மொத்தமாக தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை
37,04,099 17,52,35,991

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here