விஜய் டிவி தொடர்களில் நடித்து வந்த நடிகர் வெங்கட் உடல்நல குறைவு காரணமாக நேற்று முன் தினம் காலமானார். அவரது மறைவிற்கு விஜய் தொலைக்காட்சி ஒரு இரங்கல் அஞ்சலி வீடியோவை பதிவு செய்துள்ளது.
நடிகர் வெங்கட்
மதுரையை சொந்த ஊராக கொண்ட நடிகர் வெங்கட் சன் டிவியில் ஒளிபரப்பான ‘செல்லமடி நீ எனக்கு’ என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். விஜய் டிவியில் ‘சரவணன் மீனாட்சி’ என்ற தொடரில் தமிழ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் வெங்கட். சீரியல்களில் நடிகைகளுக்கு அப்பாவாகவும், நடிகர்களுக்கு அப்பாவாகவும், மாமனாராகவும் நடிப்பில் வித்தியாசங்களை வெளிப்படுத்தியிருப்பார் நடிகர் வெங்கட்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தொடர்ந்து ‘மைனா’, ‘சாட்டை’, ‘சூது கவ்வும்’, ‘தெகிடி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார் வெங்கட். தற்போது 55 வயதாகும் நடிகர் வெங்கட் விஜய் டிவியில் ‘ஈரமான ரோஜாவே’ சீரியலில் நடிகர் திரவியத்துக்கு அப்பாவாக நாட்டரசன் என்ற கேரக்டரில் நடித்து வந்தார் வெங்கட். மேலும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடிகை ரோஷினிக்கு அப்பாவாக சண்முகம் என்ற ரோலில் நடித்து வந்தார்.
சட்டமன்ற தேர்தலுக்கு தபால் வாக்குமூலம் தொடக்கம் – நெறிமுறைகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!!
இந்த இரு தொடர்களிலும் பிசியாக நடித்து வந்த நடிகர் வெங்கட் எதிர்பாராத விதமாக நேற்று முன் தினம் உடல்நல குறைவால் காலமானார். இவரது மறைவு இன்னும் ரசிகர்களாலும், நடிகர் நடிகைகளாலும் கூட ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. தினமும் டிவியில் இவரைக்கண்டு வந்த ரசிகர்களுக்கு இவரது திடீர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இவரது இறப்பிற்கு விஜய் தொலைக்காட்சியின் சார்பில் ஒரு இரங்கல் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.