Thursday, May 16, 2024

முதல்வர் வேட்பாளரை பா.ஜ தலைமை அறிவிக்கும் – நடிகை குஷ்பூ பேச்சு!!

Must Read

இன்னும் 4 முதல் 5 நாட்களில் பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று அந்த கட்சியின் உறுப்பினரான நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார். தேர்தல் களம் தற்போது தமிழகத்தில் சூடு பிடித்துள்ளது.

தமிழகத்தில் தேர்தல்:

தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அனைத்து பணிகளிலும் அனைத்து கட்சிகளும் இறங்கியுள்ளன. அனைத்து காட்சிகள் சார்பாக தேர்தல் அறிக்கை, பிரச்சாரம் துவங்கிவிட்டது. இதனை அடுத்து தமிழகத்தில் தேர்தல் களம் தற்போது தான் சூடு பிடித்துள்ளது. நடிகர் கமல் ஹாசன் இந்த தேர்தலில் போட்டியிட உள்ளார். அதே போல் நடிகர் ரஜினிகாந்த் போட்டியிடுவதாக கூறினார். பின், தனது உடல் நிலை காரணமாக போட்டியிடவில்லை என்று தெரிவித்துவிட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியான நிலையில் அனைத்து கட்சிகளும், தங்களது முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவித்து விட்டது. ஆளும் கட்சியான அதிமுக தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்துள்ளது. அதே போல் நடிகர் கமல் தான் அவரது கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்துள்ளார். இடையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் எல். முருகன் முதல்வர் வேட்பாளரை பா.ஜ தலைமையே முடிவு எடுக்கும் என்று கூறியது இரு கட்சிகள் இடையே மோதலை ஏற்படுத்தியது.

முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார் – தலைவர்கள் இரங்கல்!!

அதே போல் முருகனின் பேச்சு சர்ச்சையையும் ஏற்படுத்தியது. தற்போது அந்த கட்சியின் உறுப்பினரான நடிகை குஷ்பூ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போதும் வர பேசுகையில், “தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை இன்னும் 5 நாட்களில் பாரதிய ஜனதா தலைமை அறிவிக்கும்” இவ்வாறாக தெரிவித்துள்ளார். இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -