650 அடிபள்ளத்தில் விழுந்த பெண் – காதலால் ஏற்பட்ட விபரீதம்!!

0

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள ஆஸ்திரிய நாட்டில் கரிந்தியா என்னும் பகுதியில் ஃபால்கெர்ட் என்னும் மலை பகுதி உள்ளது. அங்கு ஜோடியாக சென்று தனது காதலை தெரிவிக்கும் போது எதிர் பாராத வகையில் அந்த பெண் 650 அடி பழத்தில் விழுந்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பரப்பரப்பு ஏற்படுத்தியுள்ளது.

ஃபால்கெர்ட் மலை பகுதி:

இன்றைய காலங்களில் காதல் என்பது சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரை தங்கள் பொழுதுபோக்கிறகாக செய்யப்படும் ஒரு விஷயம் ஆயிற்று. மேலும் காதலர்கள் தங்கள் காதல் வெளிப்படுத்துவதற்காக பல சம்பவங்கள் செய்துள்ளனர். ஒரு சில சம்பவங்கள் நன்றாக முடியும் ஆனால் ஒரு சில சம்பவங்கள் விபரீதத்தில் தான் முடியும். தற்போது அதே போல் தான் வெளிநாட்டில் ஓர் ஜோடி தங்களது காதலை வெளிப்படுத்துவதற்காக சென்ற பொது ஏற்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஐரோப்பிய கண்டத்தில் ஆஸ்திரிய என்னும் நாட்டில் கரிந்தியா என்னும் பகுதியில் ஃபால்கெர்ட் என்னும் மலைப்பகுதி உள்ளது. அந்த மலை பகுதிக்கு காதல் ஜோடி இருவர் சம்பவ நாளுக்கு முன்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். ஒரு நாள் இரவுக்கு பிறகு அந்த பெண்ணிடம் தனது காதலை தெரிவித்துள்ளார் அவளது காதலன். இந்த நிகழ்வு மறக்க முடியாத நிகழ்வாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த பெண் அவர் காதலனை இழுத்து சென்று மலையின் உச்சியில் வைத்து தனது காதலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒரே நாளில் 137 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை – அதிகாரிகள் தகவல்!!

நன்றாக போய்க்கொண்டு இருந்த நேரம் திடிரென்று யாரும் எதிர் பாரத வகையில் ஓர் அதிர்ச்சி சம்பவம் நடந்தது. அது என்னவென்றால் அந்த பெண் மலையின் உச்சியில் நின்ற போது தனது கால் தவறி கீழே விழுந்தார். அவரை காப்பதற்காக அந்த பெண்ணின் காதலனும் குதித்தான். அவள் காதலன் 50 அடி கீழ் உள்ள பாறையில் நடுவே விழுந்தான். ஆனால் அந்த பெண் 650 அடி கீழே விழுந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக பனிக்கட்டிகள் அங்கு இருந்ததால் அந்த பெண் உயிர் தப்பினர். மேலும் அவள் காதலன் எலும்பு முறிவுகளுடன் உயிர் தப்பினர். இவர்களை வழிபோக்கர்கள் கவனித்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here