Wednesday, May 1, 2024

கட்டாய மத மாற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறை – மாநில அமைச்சரவை ஒப்புதல் !!

Must Read

கட்டாய மத மாற்றத்திற்கு தண்டனை விதிக்கும் வகையில் புது மசோதாவிற்கு மத்திய பிரதேச மாநிலத்தின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கூடுதலாக, தண்டனை மற்றும் அபாரதத்தையும் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட மதத்தில் இருந்து மாற விரும்புவோர் 2 மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் :

இந்த மாதம் இறுதியில் சட்டமன்ற பொது கூட்டம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெறவுள்ளது. தற்போது அதற்கு முன்பே முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் அமைச்சரவை கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. தற்போது பாஜக ஆளும் மாநிலங்கள் கட்டாய மத மாற்றத்திற்கு எதிரான சட்டங்களை பிறப்பித்து வருகின்றன. ஏற்கனவே உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அதேபோல் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் புது மசோதா ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் அவர்கள் கூறியதாவது “மதம் மாற விரும்புவோர் 2 மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியிட வேண்டும். மேலும் இந்த சட்டம் நிறைவேற்றபட்ட பின் கட்டாய மத மாற்றத்திற்கு ஒருவரை ஈடுபடுத்தும் தனி நபரோ, ஓர் நிறுவனமோ 1 முதல் 5 ஆண்டு வரை சிறைத்தண்டனை அனுபவிக்க கூடும். மேலும் அவர்களுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்”

புதிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் – மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலர் ஆலோசனை!!

“மேலும் மதம் மாற்றப்பட்டவர் பழங்குடியினத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அல்லது வயது குறைந்தவர்களா இருந்தாலும் குற்றம் சாட்டபட்டவருக்கு குறைந்தது 2 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை சிறை தண்டனை உத்தரவிடப்படும். மேலும் அவருக்கு ரூபாய் 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்” என்று மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (01.05.2024)., முழு விவரம் உள்ளே…

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரின் ஆடம்பரமாக மட்டுமல்லாமல் சேமிப்பாகவும் ஆபரணங்கள் இருந்து வருகிறது. இதனால் தான் என்னவோ? விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் கூட, மக்களிடையே...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -