புதிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் – மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலர் ஆலோசனை!!

0
k shanmugam IAS
k shanmugam IAS

உருமாற்றம் அடைந்து பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தலைமை செயலாளர் சண்முகம் அவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மத்திய, மாநில அரசுகள் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பல மாதங்களாக மேற்கொண்டு வரும்போதும் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை என்றே சொல்லலாம். பலி எண்ணிக்கையும், புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் கொரோனாவின் இரண்டாம் அலை உருவாகியுள்ளது என்ற தகவல் பரவி மக்களை மேலும் அச்சமடைய செய்துள்ளது. இதுபோக, தற்போது உருமாற்றம் அடைந்த மிகவும் வீரியம் மிக்க கொரோனா வைரஸ் இங்கிலாந்திலிருந்து உலக நாடுகளுக்கு பரவி வருகின்றது என அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்த 1000கும் மேற்பட்ட பயணிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

150 இராணுவ வீரர்களுக்கு கொரோனா உறுதி – குடியரசு தினவிழா ஒத்திகையில் சிக்கல்!!

இதில் பலருக்கும் புதிய வகை கொரோனா தொற்று இருக்கும் என சந்தேகிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் இன்னும் வராத நிலையில் தற்போது தடுப்பு நடவடிக்கைகள் வெகு தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதை தொடர்ந்து இன்று, தலைமை செயலர் K.சண்முகம் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் புதிய கொரோனா பாதிப்பை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here