பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் ரத்து – பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு!!

0

பொங்கலுக்கான சிறப்பு பரிசு வழங்குவதற்காக அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரேஷன் கடையில் இருந்து டோக்கன் வழங்க அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையில் மக்களிடையே மோதல் ஏற்பட்டதால் டோக்கன் விநியோகம் ரத்து செய்யபட்டது.

பொங்கல் பரிசு:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும். இதனை முன்னிட்டு தமிழக அரசு பொங்கலுக்கு தேவையான பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பரிசாக பச்சரிசி மற்றும் சர்க்கரை தலா 1 கிலோ, முந்திரி மற்றும் உளர் திராட்சை தலா 20 கிராம், 5 கிராம் ஏலக்காய் ஓர் கரும்பு மற்றும் ரொக்க பணமாக ரூபாய் 2500 வழங்கப்படவுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இந்த பொருட்களை ரேஷன் கடைகளில் வாங்குவதற்கான டோக்கன்களை வீடுதோறும் சென்று வழங்க உள்ளதாக அரசு அறிவித்திருந்தது. அந்த டொக்கனில் எந்த தேதியில் இவை அணைத்து வாங்க வர வேண்டும் என்ற விவரம் போட்டிருக்கும். மேலும் இந்த பொருட்களை ஜனவரி மாதம் 4 ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை வழங்க அறிவித்துள்ளனர்.

மேலும் ரேஷன் கடைக்கு செல்லும் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் மேலும் கட்டாய முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சர்வர் பிரச்சனை காரணமாக கைரேகை முக்கியம் இல்லை என்று அறிவித்துள்ளனர்.

புதிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் – மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலர் ஆலோசனை!!

தற்போது மதுரை மாவட்டத்தில் உள்ள ஜால்புரம் மார்க்கெட் பகுதியில் பொங்கல் பரிசுக்கான டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்கள் தெரு முனையில் வைத்து வழங்கி வந்தனர். அதன்பின்பு இதனை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு சிலர் டோக்கன்களை ஊழியர்களிடம் இருந்து பிடுங்கும் செயல்களையும் மேற்கொண்டனர். இதனால் ஊழியர்கள் டோக்கன் வழங்குவதை நிறுத்தி விட்டு சென்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here