தென்ஆப்பிரிக்க வீரருக்கு கொரோனா – இங்கிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டி ஒத்திவைப்பு!!

0

தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஒரு நாள் போட்டிகள் இன்று நடைபெற இருந்தது. ஆப்கானில், தென் ஆப்பிரிக்கா வீரர் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதால் போட்டிகள் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் போட்டிகள்:

இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் சுற்றுப்பயணமாக தென் அப்பிரிக்காவிற்கு சென்று டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருந்தது. முதலில் இரு அணிகளுக்கும் இடையிலான டி20 போட்டிகள் நடைபெற்றது. அதில் தென் ஆப்பிரிக்காவின் சொந்த மண்ணிலேயே இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி ஜெயித்தது. இதனை அடுத்து இன்று இந்த இரு அணிகளுக்கும் இடையேயான ஒரு நாள் போட்டிகள் ஆரம்பமாக இருந்தன. இது பகலிரவு போட்டிகளாக நடைபெற இருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கிரிக்கெட் உலகின் உலக சாம்பியன் ஆன இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன், பட்லர், பேர்ஸ்டோவ், ஜேசன் ராய், ஜோ ரூட் உள்ளிட்ட வீரர்கள் தன் கைவசம் வைத்துள்ளது. இதனால் தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதி அசத்தலாக விளையாடியது. இங்கிலாந்து அணிக்கு ஒன்றும் சளைத்தது இல்லை தென் ஆப்பிரிக்க அணி.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டி – இந்திய அணி அசத்தல் வெற்றி!!

அவர்களிடமும் வலுவான வீரர்களான பவுமா, டேவிட் மில்லர், கிளஸ்சன் உள்ளிட்டோர் இருக்கின்றனர். இது வரை இந்த இரு அணிகளும் மொத்தமாக 63 ஒரு நாள் போட்டிகளில் மோதி உள்ளன. அதில், தென் ஆப்பிரிக்கா அதிகபட்சமாக 30 போட்டிகளில் வென்றுள்ளது. இப்படியான நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்கா வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதனை காரணமாக போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here