நடராஜன், சஹால் அபார பந்துவீச்சு – இந்திய அணி அசத்தல் வெற்றி!!

0

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் கேஎல் ராகுல் (51), சஞ்சு சாம்சன் (23), ரவீந்தர் ஜடேஜா (44) தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின்னர் 162 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு நிதானமான துவக்கம் அமைந்தது. ஷார்ட் (34), ஆரோன் பின்ச் (35) ரன்களில் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் (12), மேக்ஸ்வெல் (2) பெவிலியன் திரும்பினர். சூழலில் சாஹல் மாயாஜாலம் செய்ய, மறுபுறம் வேகப்பந்துவீச்சில் நடராஜன் பேட்ஸ்மேன்களை துவம்சம் செய்தார்.

ஹென்றியூஸ் (31) ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் சொதப்ப ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி சார்பில் நடராஜன் மற்றும் சாஹல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here