Tuesday, April 30, 2024

“பாட்டா” நிறுவன தலைமை செயல் அதிகாரியாக இந்தியர் நியமனம் – 126 ஆண்டுகளில் இதுவே முதல் முறை!!

Must Read

காலணி தயாரிக்கும் மிக பெரிய நிறுவனமான “பாட்டா” தற்போது முதல் முறையாக ஒரு இந்தியரை தலைமை பொறுப்புக்கு நியமித்துள்ளது. தற்போது நியமிக்கப்பட்டிருப்பவர், 25 ஆண்டு காலம் தொழில்முறை அனுபவம் கொண்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக பெரிய செருப்பு தயாரிக்கும் நிறுவனம்:

மனிதர்களாகிய நாம் ஒவ்வொரு யுகத்திலும் தன்னை தானே செதுக்கி கொண்டு, தனக்கு தேவையானதை தயாரித்து கொண்டு வாழ்ந்து வருகின்றோம். அந்த வகையில் நாம் மிகவும் அதிகப்படியாக பயன்படுத்தும் காலணிகள் கடந்த 12 ஆம் யுகத்தில் தயாரிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆரம்ப காலத்தில் சமுதாயத்தில் அந்தஸ்து உள்ளவர்கள் மட்டுமே காலணி அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. காலமாற்றத்தால், அனைவரும் பயன்படுத்தும்படி மாறியது. காலணி தயாரிக்கும் பல நிறுவனங்களில் மிகவும் பிரபலமான அதே சமயம் மக்களுக்கு தரமான காலணிகளை விற்பனை செய்யும் “பாட்டா” நிறுவனம் 1894 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

தற்போது 70 நாடுகளில் 35 ஆயிரம் ஊழியர்களுடன் செயல்பட்டு வருகின்றது. ஆண்டுக்கு சுமார் 18 ஆயிரம் காலணிகளை விற்பனை செய்கிறது. உலக அளவில் 22 இடங்களில் தனது உற்பத்தியினை செய்கிறது. செக் குடியரசு நாட்டில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு 126 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது அந்த நிறுவனத்தின் சர்வதேச தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவை சேர்ந்த சந்தீப் கட்டாரியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சந்தீப் கட்டாரியா கடந்த 25 ஆண்டுகளாக பல முன்னணி நிறுவனங்களான யுனிலீவர், யம் பிராண்ட்ஸ் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்களால் தலைமை பதவியில் செயல்பட்டுள்ளார்.

அரியர் தேர்ச்சிக்கு எதிரான வழக்கு – யூடியூப் தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதால் அதிர்ச்சி!!

“பாட்டா” இந்திய நிறுவனத்தில் அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு இணைந்துள்ளார். இதற்கு முன்பாக அவர் “பாட்டா” நிறுவனத்தின் இந்திய பிரிவிற்கு தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். முன்னணி நிறுவனமான “பாட்டா” நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக ஒரு இந்தியர் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சிறையில் முதல்வர் கெஜ்ரிவால்.. மகளிருக்கான உரிமை தொகை திட்டம் என்ன ஆனது?? முழு விவரம் உள்ளே!!

டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த மார்ச் 28ம் தேதி கைது செய்தனர். இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி திகார்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -