Friday, May 24, 2024

கடலூரை புரட்டிப் போட்ட ‘நிவர் புயல்’ – இன்று நேரில் ஆய்வு செய்யும் முதல்வர்!!

Must Read

தமிழகத்தில் நிவர் என்ற புயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் மழைநீர் வீட்டின் உள்ளே புகுந்தும், சாலையோரங்களில் 100க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை பார்வையிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிற்பகல் கடலூர் செல்ல இருக்கிறார்.

சென்னையில் சேதம்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியில் ஏற்பட்ட ஒரு சில மாற்றங்களால் நிவர் என்ற புயல் உருவாகியது. நிவர் என்பதற்கு வெளிச்சம் என்பது பொருள் ஆகும். புயல் இன்று அதிகாலை 2 மணியளவில் 110 கி.மீ வேகத்தில் புதுச்சேரிக்கு அருகில் உள்ள காரைக்கால் மாறும் மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. புயல் கரையை கடந்த பிறகு சென்னை, கடலூர், விழுப்புரம் மற்றும் பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது. இத்தகைய கனமழையினால் சென்னையில் உள்ள கிழக்கு தாம்பரம், வேளச்சேரி மற்றும் முடிச்சூர் ஆகிய பகுதியில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து வீட்டினுள் புகுந்தது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

tree fallsdown in chennai
tree fallsdown in chennai

மேலும் சென்னையில் பலத்த காற்றினால் நூற்றுக்கணக்கான பழைய மரங்கள் சாலையோரங்களில் வேரோடு சாய்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வந்தது. புயல் மற்றும் கனமழையால் அப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைக்காக கூட வீட்டை விட்டு வெளியே போகமுடியாத சூழல் உருவாகியது.

எடப்பாடி பழனிசாமி பார்வையிடல்

சென்னையில் நிவர் புயலின் தாக்கம் மற்றும் கனமழையால் பாதிப்படைந்த வேளச்சேரி, முடிச்சூர் மற்றும் கிழக்கு தாம்பரம் ஆகிய பகுதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை பார்வையிட்டார். பின்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் 2.30 மணியளவில் கடலூர் செல்லவிருக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

eps visit in chennai
eps visit in chennai

அங்கு நிவர் புயலினால் ஏற்பட்ட பாதிப்பு நிலவரங்களை குறித்து நேரில் ஆய்வு செய்கிறார். சென்னை பாரதிநகர் மற்றும் தரமணி ஆகிய இடங்களை துணை முதல்வரான ஓ.பன்னிர்செல்வம் பார்வையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

IPL 2024: இறுதிச்சுற்றுக்குள் நுழையப்போவது யார்??  ராஜஸ்தான் vs ஹைதராபாத் பலப்பரீட்சை!!  

2024 ஐபிஎல் தொடரின் Qualifier 2 போட்டியில், சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது, பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  அணியுடன் மோத இருக்கிறது....
- Advertisement -

More Articles Like This

- Advertisement -