வித்தியாசமான சுவையில் “தக்காளி முட்டைகோஸ் காரக்கறி” ரெசிபி – வாங்க சமைக்கலாம்!!!!

0

முட்டைகோஸில் அதிக நீர்சத்துக்கள் மற்றும் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. பல நோய்களை தீர்க்க வல்லது. கண் பார்வை சரியாக தெரியாதவர்கள் தினமும் உணவில் முட்டைகோஸை சேர்த்துக்கொள்ள விரைவில் கண்பார்வை தெளிவடையும். உடல் எடை, இதயநோய், புற்றுநோய், மலச்சிக்கல், தோல் நலம், தலைமுடி, ரத்த அழுத்தம் போன்ற நோய்களை குணப்படுத்தும். சுவையான முட்டைகோஸ் தக்காளி காரக்கறி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

முட்டைகோஸ் – அரை கிலோ

பெ. வெங்காயம் – 2

பச்சை மிளகாய் – 2

தக்காளி – 2

மஞ்சள் தூள் – சிறிதளவு

மிளகாய்த்தூள் – 1 டீ ஸ்பூன்

கடுகு , உளுந்து – தாளிக்க

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முட்டைகோஸை நீளநீளமாக நறுக்கி கொள்ளவும். தக்காளி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொண்ணிறமாக வதக்கியபின் தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தக்காளி குழைந்த பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும். பிறகு நறுக்கிய முட்டைகோஸை சேர்த்து 2 நிமிடம் கிளறிவிட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேகவைக்கவும். தண்ணீர் வற்றியவுடன் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கிளற வேண்டும்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

முட்டை பிடிக்கும் என்பவர்கள் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி கிளறினால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும். இப்பொழுது, சுவையான தக்காளி முட்டைகோஸ் காரக்கறி தயார். இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது தோசை, சப்பாத்தி நடுவில் வைத்து சாப்பிட்டால் மிக மிக சுவையாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here