Monday, May 20, 2024

தமிழகத்தில் ஜனவரி மாதம் பள்ளிகள் திறப்பு?? வெளியான முக்கிய தகவல்!!

Must Read

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ள நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க கல்வித்துறை முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பள்ளிகள் திறப்பு:

கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் கொரோனா காரணமாக மூடப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக பாடங்களை படித்து வந்தனர். பின்பு நவ. 16 ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

school
school

இதனை எதிர்த்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் பல எதிர்ப்புகள் எழுந்தது. இதனால் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை ஒத்திவைத்த தமிழக அரசு மருத்துவ நிபுணர்களிடம் கலந்தாலோசித்து பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவித்தது.

பள்ளிகள் திறப்பு:

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பள்ளிகளை திறக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாணவர்களை மிகுந்த பாதுகாப்புடன் வழிநடத்துவதற்கு தக்க நடவடிக்கை எடுக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

check temperature
check temperature

பள்ளியின் முன் வாசலிலேயே கைகளை சுத்தப்படுத்துவதற்கு சானிடைசர் வைக்கவும், மருத்துவ சுகாதாரத்துறை தினமும் மாணவர்களின் உடல் வெப்பநிலையை சரிபார்த்த பின்பே வகுப்பின் உள்ளே அனுமதிக்கப்படவும் மற்றும் சமூக இடைவெளியை மாணவர்கள் கடைபிடிப்பதை கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -