புற்றுநோய் பாதித்த துணைநடிகர் தவசி காலமானார் – சோகத்தில் மக்கள்!!

0

உணவுகுழாயில் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த துணைநடிகர் தவசி காலமானார். சிவகார்த்திகேயன், சூரி, சிம்பு உள்ளிட்ட பல நடிகர்கள் சிகிச்சைக்காக நிதியுதவி அளித்தனர். துணைநடிகர் தவசியின் உடல் மெலிந்து பார்க்க கவலைக்கிடமாக இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

துணைநடிகர் தவசி காலமானார்:

நான் கடவுள், ஜில்லா, வீரம், சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் நடித்து தனது கதாபாத்திரத்தை மிக அழகாக வெளிப்படுத்தியவர் துணைநடிகர் தவசி. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு அப்பாவாக “கருப்பன் குசுபுக்காரன்” என்ற வசனம் மூலம் மக்கள் அனைவரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

கடந்த சில காலமாக உணவுக்குழாயில் புற்றுநோய் ஏற்பட்டதன் காரணமாக மதுரை சரவணன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் பகுதியை சேர்த்த தி.மு.க MLA டாக்டர். சரவணன் அவர்கள் துணைநடிகர் தவசிக்கு தன் மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளித்து வந்தார். அவரது சமூக மனப்பான்மை மக்களிடையே பெரும் பாராட்டை பெற்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும், திரைத்துறையில் உள்ள நடிகர்கள் பலர் துணைநடிகர் தவசியின் சிகிச்சைக்காக நிதியுதவி செய்தனர். சிவகார்த்திகேயன், சூரி, சிம்பு ஆகியோர்கள் சிகிச்சைக்காக பணம் கொடுத்து உதவினார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். நடிகர் ரோபோசங்கர் நேரில் சென்று தவசியை பார்த்து மீண்டும் திரைத்துறைக்கு வர வேண்டும் என்றும் பழைய தவசியை பார்க்க வேண்டும் என்றும் ஊக்கமளித்தார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில், சிகிச்சை பலனிற்றி சற்றும் எதிர்பாராத விதமாக துணைநடிகர் தவசி (23.11.2020) அன்று காலமானார். அவரது வயது 60. முறுக்கிய மீசையும், தெற்கத்தி உடல்வாகும் கொண்ட அவரின் தோற்றம் அந்த மண்ணின் பெருமையை வெளிப்படுத்தியது. எந்தவொரு கதாபாத்திரத்திலும் சிறப்பாக தன் நடிப்பை வெளிப்படுத்தி மக்களை மகிழ்ச்சியில் மூழ்கடித்தவர் தவசி. துணைநடிகர் தவசியின் இழப்பை மக்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here