தமிழகத்தை தாக்க வரும் ‘நிவர் புயல்’ – உதவி எண்கள் அறிவிப்பு!!

0

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று நிவர் புயலாக மாறி உள்ளது. சென்னைக்கு கிழக்கே 470 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள புயல் சுமார் 5 கிமீ வேகத்தில் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. மேலும் புதுச்சேரிக்கு 410 கிமீ தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

நிவர் புயல் தாக்கம்:

கடந்த ஆண்டு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்திய கஜா புயலை பொதுமக்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. ஆனால் நிவர் புயலின் தாக்கம் அந்த அளவிற்கு இருக்காது எனவும், திசை மாற வாய்ப்புகள் உள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்து இருக்கும் நிலையிலும் வானிலை எந்த நேரத்திலும் மோசமடையும் நிலை இருப்பதால் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மின்துறை, பேரிடர் மீட்பு என அனைத்து அரசுத்துறை உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை விடுப்பு எடுக்காமல் மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் இன்று மாலை அதிதீவிர புயலாக நிவர் மாறும் என்பதால் அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய நிலவரப்படி சென்னையின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முகாம்களுக்கு மாற்றுமாறும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது காரைக்கால், நாகப்பட்டினத்தில் 5ம் எண் புயல் எச்சரிக்கை, புதுச்சேரியில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நிவர் புயல் குறித்த தகவல்களை பெற 1070, 1077 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை மக்கள் 1913, 044- 2538 4530, 044-2538 4540 ஆகிய அவசரகால எண்களில் பாதிப்பு குறித்த புகார்களை தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here