Sunday, May 19, 2024

மருத்துவத்துறையில் சிறப்பான மாநிலமாக திகழ்கிறது தமிழகம் – முதல்வர் உரை!!

Must Read

தனியார் மருத்துவமனை ஒன்றினை திறந்து வைத்த முதலமைச்சர் பழனிசாமி இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் மருத்துவத்துறையில் முன்னோடியாக திகழ்கிறது என்று தெரிவித்துள்ளார். தமிழக அரசு மருத்துவ துறையின் முன்னேற்றத்திற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

மருத்துவமனை திறப்பு:

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள வடபழனியில் தனியார் மருத்துவமனையினை திறந்து வைப்பதற்காக வந்தார். பின் நிருபர்களிடம் அவர் மருத்துவ துறைக்காக தமிழக அரசு எண்ணற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். விழாவில் அவர் பேசியதாவது,”நலமான மாநிலமே, வளமான மாநிலமாக திகழும். இதனை தான் திருவள்ளுவர் குறளில் “நோய் நாடி, நோய் முதல் நாடி” என்று குறிப்பிட்டுள்ளார்”

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

“தமிழகம் தான் இந்தியாவிலேயே மருத்துவ துறையில் சிறந்த மாநிலமாக திகழ்கிறது. அரசு அறிவித்துள்ள காப்பீடு திட்டம் மூலமாக பல கர்ப்பிணி பெண்கள், வயதில் முதியவர்கள் பயனடைந்துள்ளனர். அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு ஆண்டுதோறும் 18 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. தற்போது வரை 254 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன”

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

“அனைவருக்கும் சிறந்த மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. தமிழக அரசின் மகத்தான சேவைகளுக்காக மத்திய அரசு தொடர்ந்து 5 ஆண்டுகளாக விருதுகளை வழங்கி ஊக்குவிக்கிறது. 2030 ஆம் ஆண்டு அடைய வேண்டிய முன்னேற்றத்தை நாம் இப்போதே அடைந்து விட்டோம். தற்போது தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது” இவ்வாறாக முதலமைச்சர் பேசியுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -