Saturday, May 18, 2024

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 79.09 லட்சமாக உயர்வு – ஒரே நாளில் 480 பேர் மரணம்!!

Must Read

கடந்த 24 நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 79 லட்சத்தை தாண்டி உள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை போன்ற விவரங்களை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு:

கடந்த மார்ச்சில் பரவ ஆரம்பித்த கொரோனா தற்போது வரை குறைந்தபாடாக இல்லை. உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த பட்டியலில் தற்போது இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பரவல் விகிதம் அதிகரித்து கொண்டு வருகின்றது. இந்த நிலையில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கமும் பின்பற்று வருகின்றது. இதன் காரணமாக கொரோனா பரவல் அடுத்த அலையாக இந்தியாவில் பரவி வருகின்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

corona
corona

இன்று காலை 8 மணி வரை உள்ள கொரோனா பாதிக்கப்பட்டோர், கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை குறித்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மீண்டும் கொரோனா உச்சம் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அறிக்கையில் கூறப்பட்டதாவது, தற்போது உள்ள நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 45,148 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிப்பு சதவீதம்:

இதன் காரணமாக மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 79,09,959 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 480 பேர் மரணம் அடைந்துள்ளனர். மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,19,014 பேராக உயர்ந்துள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தொற்றில் இருந்து நேற்று ஒரே நாளில் மட்டும் 59,105 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாளுக்கு நாள் குணம் அடைத்தோர் எண்ணிக்கை உயர்ந்தாலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. குணமடைந்தோர் சதவீதம் 90 சதவீதமாக உயர்ந்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -