Sunday, May 19, 2024

குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் – பா.ஜ தேசிய தலைவர்!!

Must Read

அனைத்து தரப்பு மக்களும் குடியுரிமை திருத்த சட்டத்தின் நன்மைகளை பெறுவர் என்றும் விரைவில் அந்த சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு:

கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசால் பொது முடக்கம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்தியாவில் குடியுரிமை சட்டம் அமல்படுத்த தாமதம் ஏற்பட்டது. இந்த சட்டம் விரைவில் நடைமுறைபடுத்தப்படும் என்று பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார். மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள சிலிகுரியில் நடத்த விழா ஒன்றில் பங்கேற்ற ஜே.பி. நட்டா தலித்துகள், கோர்காக்கள், ராஜ்பன்ஷிகள் மற்றும் பிற பழங்குடியினர் உள்பட சமூக குழுக்களுடன் பேசியபோது குடியுரிமை சட்டம் பற்றி விளக்கினார்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

அந்த சட்டம் குறித்த தற்போதைய நிலையினையும் அவர் விளக்கினார். அவர் கூறியதாவது, “கொரோனா பரவல் காரணமாகவும், பொது முடக்கம் காரணமாகவும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்த காலதாமதம் ஏற்பட்டது. விரைவில் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இந்த சட்டத்திற்கான விதிகள் மற்றும் நிபந்தனைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன”

மகிழ்ச்சியின் உச்சத்தில் நகைப்பிரியர்கள் – அதிரடி விலை குறைப்பில் தங்கம்!!

“இந்த பணிகள் மிக விரைவாக முடிந்து விடும். இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைவர். மேற்கு வங்க மாநிலத்தில் நடக்கும் மம்தா தலைமையிலான ஆட்சியில் இந்துக்கள் அதிகமாக துன்படுத்தப்படுகின்றனர்”

விவசாயிகளுக்கான திட்டம்:

“பிரதமரின் விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டங்கள் அவர்களுக்கு சரியான முறையில் கிடைப்பதில்லை. பிரதமரின் திட்டங்களை அமல்படுத்த மறுப்பதால் 76 லட்சம் விவசாயிகளுக்கு அதன் பலன் கிடைப்பதில்லை. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி அடைந்தால் நாங்கள் இந்த திட்டத்தை விவசாயிகளின் நன்மைக்காக வழங்குவோம்” இவ்வாறாக அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -