‘ஆதார் PVC கார்டை’ பதிவு செய்யப்படாத மொபைல் எண் மூலம் ஆர்டர் செய்வது எப்படி?? எளிய வழிமுறைகள் இதோ!!

0

மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வெளியில் எடுத்துச் செல்லும் வசதியுடன் UIDAI புதிய ஆதார் PVC கார்டை அறிமுகப்படுத்தி உள்ளது. உங்கள் ஆதார் அட்டையுடன் மொபைல் எண் பதிவு செய்யப்படாவிட்டாலும் புதிய ஆதார் பி.வி.சி கார்டை ஆர்டர் செய்ய யுஐடிஏஐ ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன் எளிய வழிமுறைகளை இந்த பதிவில் காணலாம்.

ஆதார் PVC கார்டு:

புதிய ஆதார் பி.வி.சி அட்டையின் பாதுகாப்பு அம்சங்களில் புகைப்படம் மற்றும் விவரங்களுடன் கூடிய QR கோர்டு, ஹாலோகிராம், மைக்ரோ ஷிப், வெளியீடு மற்றும் அச்சிடப்பட்ட தேதி, ஆதார் லோகோ ஆகியவை அடங்கும். ஏடிஎம் அல்லது டெபிட் கார்டு அளவிலான ஆதார் பி.வி.சி கார்டை பெற ₹ 50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது பர்சில் வைக்கும் அளவிற்கும், மழை, வெயில் போன்றவற்றை தாங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளதால் எளிதாக வெளியில் எடுத்துச் செல்லலாம்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு உங்கள் மொபைல் எண் ஆதாரில் பதிவு செய்யப்படாவிட்டாலும் புதிய ஆதார் பி.வி.சி கார்டை ஆர்டர் செய்ய இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் ஆதார் பி.வி.சி கார்டை ஆர்டர் செய்வதற்கான OTP ஐப் பெற எந்த மொபைல் எண்ணையும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பதிவு செய்யப்படாத மொபைல் எண் மூலம் ஆர்டர் செய்யும் முறை:

1) முதலில் அதிகாரப்பூர்வ UIDAI இணையதளத்தில் உள்நுழைய வேண்டும்.

2) எனது ஆதார் ஆப்ஷனில், ‘ஆர்டர் ஆதார் பி.வி.சி கார்டு’ என்பதைக் கிளிக் செய்க

3) உங்கள் ஆதார் எண் (யுஐடி) அல்லது பதிவு ஐடி (ஈஐடி) ஐ உள்ளிடவும்.

4) இப்போது கேப்ட்சாவை (CAPTCHA) உள்ளிடவும். பின்னர் ‘எனது மொபைல் எண் பதிவு செய்யப்படவில்லை’ என்பதைக் கிளிக் செய்க.

5) நீங்கள் OTP ஐப் பெற விரும்பும் மொபைல் எண்ணை உள்ளிடவும்.

6) மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும். பின்னர் அனைத்து விபரங்களையும் சரிபார்த்து சமர்ப்பிப்பு ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

7) சமர்ப்பித்த பிறகு, ஆதார் பி.வி.சி கார்டின் மாதிரி திரையில் காண்பிக்கப்படும்.

8) அதன் பின்னர் Make Payment என்பதைக் கிளிக் செய்க. ஆன்லைன் கட்டண முறையில் பணம் (ரூ.50) செலுத்துங்கள்.

9) பணம் செலுத்தியவுடன் உங்கள் ஆதார் பி.வி.சி அட்டை ஆர்டர் செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here