Sunday, May 19, 2024

இன்றைய முக்கிய செய்திகளின் துளிகள் – மறக்காம படிங்க!!

Must Read

தேசிய செய்திகள்:
  • தேசிய அளவில் 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய தேர்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விடைத்தாள்களை சரிபார்த்து ஏதேனும் திருத்தும் இருந்தால் அதனை தேர்வு முகாமையிடம் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
  • கொரோனாவை கையாள்வதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்தது டுவிட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றது.
மாநில செய்திகள்:
  • வரும் காலங்களில் துறை வாரியான தேர்வுகளை ஆன்லைனில் நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) முடிவு செய்துள்ளது. சென்ற ஆண்டு ஜூன், நவம்பர் மாதங்களில் TNPSC சார்பில் நடத்தப்பட்ட பொதுப்பணி துறை உதவி இயக்குனர் & குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மற்றும் மருத்துவ ஆய்வாளர் மற்றும் இளநிலை பகுப்பாய்வாளர் ஆகிய தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
  • ரேஷன் கடைகளில் அக்டோபர் மாதம் அமல்படுத்தப்பட்ட பயோமெட்ரிக் முறையில் பல வித சிக்கல்கள் இருந்ததால் இனி வரும் நாட்களில் ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பயோ மெட்ரிக் முறைகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளத.
  • வேலூர் மண்டலத்தின் முதன்மை பொறியாளரின் வீட்டில் கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் ரொக்கம், கிலோ கணக்கில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து எதுவும் தேவையில்லை என்று தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழக அரசுக்கு கட்டுப்பட்டது தான் பல்கலைக்கழகமே தவிர, பல்கலைக்கழகத்திற்கு அரசு கட்டுப்பட்டது அல்ல. அதே போல் சிறப்பு அந்தஸ்து என்ற ஒன்றிக்காக தமிழக அரசு எதையும் இழக்க தயாராக இல்லை என்றும் கூறியுள்ளார்.
வர்த்தக செய்திகள்:
  • இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) ரூ.23 உயர்ந்து ரூ.4,853க்கும், ஒரு சவரன் 184 ரூபாய் அதிகரித்து ரூ.38,824க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்து ஒரு கிராம் ரூ.65.60 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
வானிலை ரிப்போர்ட்:
  • தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வரும் 19 ஆம் தேதி மத்திய கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
  • கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஐந்து நிமிடங்களில் தொற்று பாதிப்பை கண்டுபிடிக்கும் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவி மக்கள் மதியியல் நல்ல வரவேற்பினையும் பெற்றுள்ளது.
  • அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் ஆளுநரின் முடிவு வெளி வந்த பின் தான் மருத்துவ கலந்தாய்வு குறித்து யோசிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  • வரும் அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை அண்ணா இன்ஜினியரிங் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாளை முதல் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
- Advertisement -

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -