சூப்பரான ‘க்ரீன் சிக்கன் கபாப்’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
green chicken kabab
green chicken kabab

சிக்கன் அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் உணவு ஆகும். சிக்கன் கிரேவி, சிக்கன் 65, சிக்கன் குழம்பு என பல வகையான ரெசிபியை பார்த்துள்ளோம். இப்பொழுது சூப்பரான ஸ்னாக்ஸ் ரெசிபியான ‘க்ரீன் சிக்கன் கபாப்’ எப்படி செய்றதுன்னு பாப்போம் வாங்க.

தேவையான பொருட்கள்

chicken
chicken

சிக்கன் கைமா – 1/2 கி

பிரட் – 3

கொத்தமல்லி

புதினா

வெங்காயம் – 1

சீரகத்தூள் – ஒரு தேக்கரண்டி

இஞ்சிபூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி

கரம் மசாலா – ஒரு தேக்கரண்டி

மஞ்சள்தூள் – ஒரு தேக்கரண்டி

மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி

முட்டை – 2

செய்முறை

முதலில் பிரட், கொத்தமல்லி மற்றும் புதினாவை தண்ணீர் ஊற்றாமல் மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். இதனை ஒரு சிறிய தட்டில் எடுத்துக்கொள்ளவும். அதன் பிறகு சிக்கன் கைமாவில் வெங்காயம், மஞ்சள்தூள், இஞ்சிபூண்டு விழுது, மிளகாய்த்தூள், சீரக தூள், கரம் மசாலா போன்றவற்றை சேர்த்து நன்கு பிசைந்து எடுத்துக்கொள்ளவும்.

greeen chicken kabab
greeen chicken kabab

இப்பொழுது மூட்டையை ஒரு சிறிய பௌலில் கலந்து எடுத்துக்கொள்ளவும். இப்பொழுது இந்த சிக்கன் கலவையை நீளமாக உருட்டி முட்டையில் நனைத்து அந்த பிரட் புதினா கலவையில் பிரட்டி மீண்டும் முட்டையில் நனைத்து அதன் பின் பிரட் துகளில் பிரட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான க்ரீன் சிக்கன் கபாப் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here