ஒரே மாதத்தில் முகம் கண்ணாடி போல ஜொலிக்க வேண்டுமா?? காபி பவுடர் ஃபேசியல்!!

0
nazriya
nazriya

முக அழகை பராமரிக்க நாம் பல வழிமுறைகளை கையாளுகிறோம். ஆனால் சிலருக்கு அது எதுவும் வேலையே செய்யாது. சில கிரீம்களை பயன்படுத்துவதால் சருமத்திற்கு மேலும் அலர்ஜியை ஏற்படுத்தி விடுகிறது. இதனை தடுக்க வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சருமத்தை பாதுகாக்கலாம்.

சரும அழகை பாதுகாக்க..

நாம் வெளியில் செல்லும் போது சுற்றுசூழலில் உள்ள மாசுக்கள் நமது முகத்தில் படிகிறது. வெளியே சென்று வீட்டிற்கு வரும்போது முகத்தை சரிவர கழுவாமல் இருப்பதால் தான் அது அழுக்காக மாறி இறந்த செல்களாக முகத்தில் தங்கி விடுகின்றன. இது நாளடைவில் முகத்தில் பருகளாகவோ அல்லது கரும் புள்ளிகளாகவோ மாறுகிறது.

ஒரே மாதத்தில் முடி உதிர்வை தடுக்க வேண்டுமா?? எளிமையான இயற்கை மருத்துவம்!!

facial tips in tamil
facial tips in tamil

இதனை ஆரம்பத்திலேயே கவனித்து முகத்தை பராமரித்து வந்தால் சருமத்தை எப்பொழுதும் மிருதுவாக வைத்திருக்கலாம். மேலும் எண்ணெய் பதார்த்தங்களை அதிகம் உணவில் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இதனால் முகத்தில் எண்ணெய் படிவத்தை தடுக்கலாம்.

தேவையான பொருட்கள்

Besan-Face-Packs-For-Skin-Whitening
Besan-Face-Packs-For-Skin-Whitening

காபி பவுடர்

ரோஸ் வாட்டர்

பால்

எலுமிச்சை பழம்

க்ரீன் டீ

கற்றாழை

கடலை மாவு

சாக்லேட்

தயிர்

தேன்

வழிமுறைகள்

  • முதலில் பாலை ஒரு காட்டன் துணியில் நனைத்து அதனை முகத்தில் தடவ வேண்டும். 10 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறும்.
  • அதன் பிறகு காபி தூளை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இப்பொழுது நன்கு காய்ந்ததும் முகத்தை கழுவ வேண்டும்.
facial tips
facial tips
  • இப்பொழுது அதே பௌலில் காபி துளை சேர்த்து சிறிது சர்க்கரை சேர்த்து அதனுடன் எலுமிச்சை சாறையும் சேர்க்க வேண்டும். இதனை முகத்தில் வலப்புறமாக வட்டமாக தடவ வேண்டும். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதனால் முகத்திற்கு ரத்த ஓட்டம் சீராகும். மேலும் இறந்த செல்களும் மறையும்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

  • அதன் பின் கிரீன் டீ பாக்கெட்டை நீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அந்த நீரில் ஆவி பிடிக்க வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறும்.
  • அதன் பிறகு ஒரு பௌலில் உருக வைத்த சாக்லேட், கடலை மாவு, காபி தூள், தேன் மற்றும் தயிர் சேர்த்து கலந்து அதனை முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் ஒரே மாதத்தில் முகம் பட்டுபோல ஜொலிக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here