Monday, May 20, 2024

விஜயகாந்த் உடல் நலன் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் – தேமுதிக தலைமை கழகம் அறிவிப்பு!!

Must Read

தேமுதிக தலைவர் விஜயகாந்த நல்ல ஆரோக்கியமுடன் தான் உள்ளார் என்றும் அவரது உடல் நிலையை பற்றிய வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் & பரப்ப வேண்டாம் என்று தேமுதிக கட்சியின் தலைமை கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு:

தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே சில உடல் உபாதைகளால் அவதிபட்டு வருகிறார். அதனால், மாதம்தோறும் முழு உடல் பரிசோதனை மேற்கொள்வது வழக்கம். அப்படி அவர் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனைக்கு உடல் நல பரிசோதனை மேற்கொள்ள சென்றார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக அதே மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சையும் பெற்று வந்தார். இப்படியாக இருக்க, கடந்த 28 ஆம் தேதி அவரது மனைவியும் தேமுதிக கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனை அடுத்து அவரும் அதே மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தலைமை கழகம் அறிவிப்பு:

தொடர் சிகிச்சையின் பலனாக இருவரும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி நலமாக வீடு திரும்பினர். பின், தற்போது விஜயகாந்த் மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது உடல் நலன் குறித்து பல வதந்திகள் பரவி வருகிறது. அவரது உடல் நலன் குறித்து மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தது என்னவென்றால் “விஜயகாந்த் கொரோனாவிற்கு பிந்தைய உடல் பரிசோதனைக்காக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.” என்று கூறினர்.

சுஷாந்த் சிங் தற்கொலையில் போதைப்பொருள் வழக்கு – ரியாவிற்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!!

இவர்களை தொடர்ந்து தேமுதிக கட்சியின் தலைமை கழகம் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைக்காக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பூரணமான உடல் நலத்துடன் தான் இருக்கிறார். அவரது உடல் நலன் குறித்து யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம். அது போன்ற வதந்திகளை பரப்பவும் வேண்டாம்” என்று தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -