சுவையான ‘முட்டை லாலிபாப்’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
egg lollypop Manchurian_Recipe
egg lollypop Manchurian_Recipe

முட்டையில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு தினமும் கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும் இதில் ஒமேகா – 3, அமினோ ஆசிட்கள் போன்றவை உள்ளது. மேலும் இது புரதச்சத்துக்கள் அதிகம் கொண்டிருப்பதால் எலும்புகளுக்கு நல்லது. இதனை வைத்து ‘முட்டை லாலிபாப்’ எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

முட்டை – 5

வெங்காயம் – 2

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி

மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி

பச்சைமிளகாய் – 3

கடலை மாவு – 2 தேக்கரண்டி

பூண்டு – 4

பிரட் துகள் – 5 தேக்கரண்டி

இஞ்சி – சிறிது

தக்காளி சாஸ்

செய்முறை

முதலில் 4 முட்டையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு அதனை துருவி எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது அதனை பௌலில் போட்டு அதனுடன் கடலைமாவு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், பச்சை மிளகாய், உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். அதன்பின் அதில் ஒரு முட்டையை அடித்து அந்த கலவையில் சேர்த்து பிசையவும்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

egg lollypop
egg lollypop

இப்பொழுது உருண்டையாக உருட்டும் அளவிற்கு இருக்க வேண்டும். இதனை இப்பொழுது கலந்து வைத்த முட்டை கலவையில் முக்கி பிரட் துகளில் புரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து வதக்கவும். அதன்பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

egg lollypop
egg lollypop

நன்கு வதங்கியதும் தக்காளி சாஸை சேர்த்து வதக்கி உப்பு மற்றும் மிளகுத்தூளை அதில் சேர்க்கவும். அதன் பின் நாம் பொரித்து வைத்திருக்கும் முட்டையை அதில் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறி 5 நிமிடங்களுக்கு பிறகு இறக்கினால் சுவையான ‘முட்டை லாலிபாப்’ தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here