Saturday, May 18, 2024

பண்டிகை கால வழிகாட்டு நெறிமுறைகள் – சுகாதார அமைச்சகம் வெளியீடு!!

Must Read

அடுத்த மாதம் பண்டிகை காலம் துவங்க உள்ள நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பொதுமக்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

கொரோனா பொது முடக்கம்:

கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் தற்போது பல வித தளர்வுகளுடன் 5ஆம் கட்டமாக பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்த மாதம் அக்டோபர் 31 ஆம் தேதி வரை முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

அக்டோபர் மாதம் முதல் இந்தியாவில் பல மத பண்டிகைகள் உள்ளன. அடுத்த மாதம் தளர்வுகளுடன் பண்டிகைகள் கொண்டாடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான வழிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. குடும்ப நல துறை அமைச்சகமும் சில நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

என்னென்ன நெறிமுறைகள்:

  • கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பண்டிகை நிகழ்ச்சி நடத்த அனுமதி கிடையாது.
  • வயதில் மூத்தவர்கள், சிறுவர் சிறுமியர் மற்றும் கர்ப்பிணி பெண்கள் அனைவரும் வீட்டில் இருத்தல் நலம்.
  • விழாக்களை சரியாக திட்டமிட்டு நடத்த வேண்டும்.
  • கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
  • விழாக்களில் பங்கேற்கும் அனைவரும் முகக்கவசத்தை கண்டிப்பான முறையில் அணிய வேண்டும்.
  • நாடகம் மற்றும் சினிமா கலைஞர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மேடை கலைஞர்களுக்கும் பொருந்தும்.
  • உடல் நல பரிசோதனை கட்டாயமாக்கப்பட வேண்டும்.
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழு விழா நடைபெறும் இடத்தில் இருக்க வேண்டும்.

இவ்வாறாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

CSK vs RCB 2024: முக்கிய போட்டியில் இணையும் ‘இந்தியன் 2’ படக்குழு.. வெளியான முக்கிய அப்டேட்!!

IPL தொடரின் 17வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இன்று  (மே 18) நடைபெறும் முக்கிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -