Friday, May 3, 2024

இந்தியர்களின் சராசரி எடை மற்றும் உயரம் அதிகரிப்பு – ஆய்வில் தகவல்!!

Must Read

தற்போது இந்தியர்களின் எடை மற்றும் உயர அளவு முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு கூடியுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதே போல் அதிகப்படியான ஊட்டச்சத்து உணவுகளை அனைவரும் உண்ண வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்த ஆண்டிற்கான கணக்கீடு:

தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் தற்போது ஒரு கணக்கீட்டினை வெளியிட்டுள்ளது. அதனை 2010 ஆம் ஆண்டு கணக்கீடு உடன் ஒப்பிடும் செய்துள்ளது. அதன் படி சராசரியாக இந்திய ஆண்களின் எடை 60 கிலோவாக இருந்தது, ஆனால், தற்போது அது 65 கிலோவாக கூடியுள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

அதே போல் இந்திய பெண்களின் எடை சராசரியாக 50 கிலோவாக இருந்தது, ஆனால், தற்போது அது 55 கிலோவாக அதிகரித்துள்ளது. எடை மட்டும் அல்லாமல் உயரமும் அதிகரித்துள்ளது. சராசரியாக ஆண்களின் உயரம் 5.6 அடியாக இருந்தது. ஆனால், தற்போது 5.8 அடியாக உயர்ந்துள்ளது. சராசரியாக பெண்களின் உயரம் 5 அடியாக இருந்தது. அது தற்போது 5.3 அடியாக உயர்ந்துள்ளது.

எதனால் இது ??

இது எதனால் இப்படி நிகழ்ந்துள்ளது என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சராசரியா உட்கொள்ள உணவின் அளவினை விட அதிகமாக உட்கொள்ளுவதால் தான் இது போன்ற உயர் ஏற்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று – ஐசிஎம்ஆர் அதிர்ச்சி தகவல்!!

அனைவரும் நாள் ஒன்றிற்கு 40 கிராம் கொழுப்பு, 100 கிராம் கார்போஹைட்ரைடு எடுத்து கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த பத்து ஆண்டுகளில் இது பெரிய மாற்றமாக கருதப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -

More Articles Like This

- Advertisement -