Saturday, May 25, 2024

இன்னும் 8 மாதங்களில் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் நடக்கும் – ஸ்டாலின் உரை!!

Must Read

இன்னும் 8 மாதங்களுக்கு பின் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் நடக்கும் என்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

பொதுக்குழு கூட்டம்:

இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து விதமாக பணிகளிலும் தமிழகத்தின் பெரிய கட்சிகளாக கருதப்படும் திமுக மற்றும் அதிமுக ஈடுபட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக இன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

அண்ணா அறிவாலயத்தில் கொரோனா பொது முடக்கம் காரணமாக காணொளி வாயிலாக கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் தலைமை தாங்கினார். இன்று அந்த கட்சியின் அனைத்து பிரதிநிதிகளின் சார்பில் ஒரு மனதாக திமுகவின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

துணைப் பொதுச்செயலாளராக ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். பின் கட்சி கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஸ்டாலின் புகழாரம்:

கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது “கட்சியின் தலைமை தொண்டனாக நான் செயல்பட காத்திருக்கிறேன். கட்சியில் இருக்கும் அனைவரும் உழைத்தால் தான் நாம் ஆட்சி அமைக்க முடியும். 2021 ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக தான் வெற்றி பெரும். அது கடினமாக தான் இருக்கும் ஆனால், நாம் முயற்சி செய்தால் அது நடக்கும். உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் எனக்கு தேவை.”

தனியார் கல்லூரிகளில் ஒரு ஷிப்ட் முறை??

stalin and thuraimurugan
stalin and thuraimurugan

“கட்சியின் பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்டிருக்கும் துரைமுருகன் கட்சிக்காக கடுமையாக உழைத்தவர். 9 முறை சட்டமன்றத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சூப்பர் ஸ்டார். அவர் தான் கட்சியில் மூத்த தலைவர். ஸ்டாலின் பேச்சைக் கேட்ட துரைமுருகன் நெகிழ்ந்து கண்கலங்கிவிட்டார். கட்சியில் இந்த பதவியில் அண்ணா, அன்பழகன் இருந்துள்ளனர். அவர்களுக்கு அடுத்து இவர் தான் அந்த பதவிக்கு தகுதி ஆனவர். டி.ஆர்பாலு தற்போது பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.”

“அவர் கலைஞருக்கு கார் ஓட்டுநராக இருந்தவர். கலைஞருடன் சிறைச்சாலைக்கு சென்றவர். அவர் நமது கட்சிக்கு கிடைத்த போர்வாள். அவர் இந்த கட்சிக்காக உழைத்தவர். இவர்கள் இருப்பதால் கண்டிப்பாக நாம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவோம்.” இப்படியாக தனது தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பேசினார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

KKR vs SRH இறுதிப்போட்டியில் மழைக்கு வாய்ப்பு.. வெளியான வானிலை ரிப்போர்ட்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொல்கத்தா நைட்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -