கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி – பொதுமக்கள் அதிர்ச்சி!!

0

தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக ஹரியானா கல்வி அமைச்சர் கன்வர் பால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா தொற்று:

ஹரியானா மாநிலத்தில் இதுவரை 81,059 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ள நிலையில் 854 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் ‘சில அறிகுறிகள் இருந்த காரணத்தால் எனக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் கோவிட் 19 தொற்று உறுதியாகி உள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி, சோதனைகள் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று கல்வி அமைச்சர் கன்வர் பால் ட்வீட் செய்துள்ளார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இன்னும் 8 மாதங்களில் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் நடக்கும் – ஸ்டாலின் உரை!!

கன்வர் பால் தற்போது சண்டிகரில் உள்ளதாக அமைச்சரின் உதவியாளர் தெரிவித்துள்ளார். ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் அவர்களுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி மின்வாரிய அமைச்சர் ரஞ்சீத் சிங், வேளாண் அமைச்சர் ஜே பி தலால், போக்குவரத்து அமைச்சர் மூல் சந்த் சர்மா, சட்டமன்ற சபாநாயகர் கியான் சந்த் குப்தா ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here