Friday, May 10, 2024

கமலா ஹாரிஸ் அதிபரானால் அது அமெரிக்காவிற்கே அவமானம் – டொனால்ட் டிரம்ப் உரை!!

Must Read

அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிடும் கமலா ஹாரிஸ் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அது அமெரிக்க நாட்டிற்கு அவமானம் என்று குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் பிரச்சார கூட்டத்தில் உரை நிகழ்த்தியுள்ளார்.

அதிபர் தேர்தல்:

வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவிக்காக போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக ஜனநாயக கட்சி சார்பில் ஜோபிடன் அதிபர் பதவிக்காக போட்டியிடுகிறார். அதே போல் துணை அதிபர் பதவிக்காக தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

kamala harris
kamala harris

தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் வடக்கு கரோலினாவில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற டொனால்ட் டிரம்ப் உரையாற்றினார்.

டிரம்ப் சர்ச்சை பேச்சு:

அவர் கூறியதாவது “எதிர்க்கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஸை அமெரிக்க மக்கள் ஒரு போதும் விரும்பவில்லை. அவர் ஒரு நாளும் அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக வர முடியாது. அப்படி அவர் இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது அமெரிக்காவிற்கு அவமானம். உலகத்தின் மிகசிறந்த பொருளாதாரத்தை கொண்ட நாடு அமெரிக்கா.”

எண்கணித விதிப்படி உங்கள் வாழ்கை எப்படி இருக்கும்??

“ஆனால், இந்த கொரோனா நோய் பரவல் காரணமாக பொருளாதாரம் சற்று சரிவினை சந்தித்துள்ளது. அதனை கூடிய விரைவில் சரி செய்வோம். எதிர்க்கட்சியை சேர்ந்த ஜோபிடன் இந்த தேர்தலில் வெற்றி அடைந்தால் அது சீனா வெற்றியடைந்ததற்கு சமம்.” என்று கடுமையாக பேசியுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் நாய் வளர்ப்பவர்களுக்கான கட்டுப்பாடு., அரசு அதிரடி உத்தரவு!!!

சென்னையில் பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, ராட்வீலர் வகையை சேர்ந்த  2 நாய் கடித்து குதறியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமிக்கு,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -