தனியார் கல்லூரிகளில் ஒரு ஷிப்ட் முறை – உயர்கல்வித்துறை பதிலளிக்க உத்தரவு!!

0
College
College

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கொண்டு வரப்பட உள்ள ‘ஒரு ஷிப்ட்’ வகுப்புகள் முறையை தனியார் கல்லூரிகளிலும் அமல்படுத்துமாறு வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், உயர்கல்வித்துறை செயலர் மற்றும் கல்லூரி கல்வி இயக்குனர் பதிலளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

ஒரு ஷிப்ட் முறை:

தமிழகத்தில் 2006ம் ஆண்டுக்கு முன்பு வரை கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒரு ஷிப்ட் முறை (காலை 10 முதல் மாலை 4 வரை) வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. மாநிலம் முழுவதும் உள்ள 65க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் அதிகப்படியான மாணவர்கள் பயில்வதால் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இரு ஷிப்ட் முறை கொண்டு வரப்பட்டது. அதாவது, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஒரு ஷிப்ட் மாணவர்களுக்கும், மதியம் 2 மணி முதல் மாலை 6 வரை மற்றொரு ஷிப்ட் மாணவர்களுக்கும் வகுப்புகள் எடுக்கப்பட்டது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

college exams
college students

இந்நிலையில் வரும் கல்வியாண்டு (2020-21) முதல் அனைத்து அரசு கல்லூரிகளிலும் ஒரு ஷிப்ட் முறை (காலை 10 முதல் மாலை 4 வரை) வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு, கடந்த ஜூலை மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த உத்தரவை 1,249 தனியார் சுயநிதி கலை, அறிவியல் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கும் அமல்படுத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

செப். 21 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

இன்று வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசின் உத்தரவு பாரபட்சமாக இருப்பதாகவும், தனியார் கல்லூரி மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் வரும் செப்டம்பர் 22ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உயர்கல்வித்துறை செயலர் மற்றும் கல்லூரி கல்வி இயக்குனருக்கு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here