Monday, May 20, 2024

தென்மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

Must Read

தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கனமழை:

வெப்பச்சலனம் மற்றும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகத்துடன் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் அடுத்த 3 நாட்கள் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

தமிழகத்தில் வெப்பநிலை:

வெப்பநிலை அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தபட்சமாக 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது, அதிகபட்சமாக 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் ரத்து செய்ய வேண்டும் – அமைச்சர்கள் சீராய்வு மனுதாக்கல்!!

வரும் 30, 31 மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதிகளில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

தென்மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடலில் காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 1

https://www.youtube.com/watch?v=oTSYwpEJuW8  Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!
- Advertisement -

More Articles Like This

- Advertisement -