Thursday, May 2, 2024

நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் ரத்து செய்ய வேண்டும் – அமைச்சர்கள் சீராய்வு மனுதாக்கல்!!

Must Read

நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று 6 மாநிலங்களை சேர்ந்த அமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு:

கடந்த சில நாட்களாக கொரோனா நோய் பரவலால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஸ்தம்பித்து போய் உள்ளது. இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. மக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

ஆனால், இந்த நிலையில் தேசிய அளவில் எழுதப்படும் தேர்வுகளான நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது மாணவர்கள் மத்தியில் பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் நூலகங்களை திறக்க அனுமதி – வழிமுறைகள் வெளியீடு!!

கடந்த 17 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் தெரிவித்தது என்னவென்றால் “கொரோனா பரவல் இன்னும் எத்தனை ஆண்டுகள் இருக்கும் என்று தெரியாது. அது இன்னும் 2 ஆண்டுகள் கூட நீடிக்கலாம் அப்போதும் இது போல் தேர்வினை ரத்து செய்ய முடியுமா??. தேர்வினை ரத்து செய்வது மாணவர்களின் எதிர்கால நலனை பாதிக்கும்” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

பலரும் எதிர்ப்பு:

இந்த தீர்ப்பிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கடந்த புதன் கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் முதலமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் இந்த தேர்வுகளை ரத்து செய்ய கோரி மனு ஒன்றை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

sonia gandhi and ministers meet
sonia gandhi and ministers meet

அதன் அடிப்படையில், இன்று 6 மாநிலங்களை சேர்ந்த அமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளனர். சத்தீஸ்கர், பஞ்சாப், மேற்கு வங்கம், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த அமைச்சர்கள் இந்த மனுவினை வழங்கி உள்ளனர். உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

அதிரடியாக குறைந்த பூண்டின் விலை.., ஒரு கிலோ இவ்வளவு தானா.., முழு விவரம் இதோ!!!

தமிழகத்தில் இப்போது நாளுக்கு நாள் காய்கறிகளின் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. அந்த வகையில் இத்தனை நாள் பூண்டின் விலை உச்சத்தில் இருந்த...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -