Saturday, May 11, 2024

சரயு நதி கரையில் பொன்னான வரலாறு பொறிக்கப்பட்டுள்ளது – அயோத்தி பெருவிழாவில் மோடி உரை!!

Must Read

இன்று நடந்த ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ராமர் கீதங்கள் எங்கும் ஒலிக்கின்றது என்று கூறியுள்ளார்.

ராமர் கோவில் விழா:

இன்று அயோத்யாவில் உள்ள ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிறரதமர் முதல் பல முக்கியமான தலைவர்கள் பங்கேற்றனர். இந்த விழா ஒரு சிறப்பு பெரும் விழாவாக மாறி இருந்தது. இன்று இந்த விழாவிற்கு வந்து அடிக்கல் நாட்டி கட்டட பணிகளை நிறுவிய பாரத பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் தனது கருத்துக்களை பதிவிட்டார்.

பிரதமர் பேசியதாவது:

தனது உரையில் ” உலகில் உள்ள எல்லா ராம பக்தர்களுக்கு மற்றும் விழாவில் பங்குபெற்ற அனைத்து தலைவர்களுக்கு எனது வணக்கங்கள். இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் என்று நம்மில் யாரும் நினைத்து இருக்க மாட்டோம். சரயு நதி கரையில், ஒரு பொன்னான வரலாறு பொறிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் வியப்பிற்குரிய நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

PM modi in ayodhya temple ceremony
PM modi in ayodhya temple ceremony

ராமர் பற்றிய கீதங்கள் எல்லா திசைகளிலும் ஒலிக்கின்றது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து அனைத்து தரப்பு மக்களும் அமைதி காத்தது, சிறப்பான விஷயம். ராமர் கோவிலை கட்டுவது பலரது கனவு என்று கூட சொல்லலாம். இதில் நான் கலந்து கொண்டது மிகவும் திருப்தி அளிக்கும் ஒன்றாக உள்ளது.

திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கம் – ஸ்டாலின் அதிரடி!!

இது பலரது போராட்டத்தை நினைவு கூர்ந்துள்ளது. பல இந்தியர்கள் இதற்காக போராடியுள்ளனர். வேற்றுமையில் ஒற்றமை என்றால் அதற்கு ராமர் கோவில் தான் சாட்சி. ராமரின் வரலாறை அளிக்கும் முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது. ராமா ராஜ்யத்தில் வேற்றுமை இலை, எல்லைகள் இல்லை, அது போல் நாமும் இனி இருப்போம் என்று நம்புவோம்.” என்று தனது உரையில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -