திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கம் – ஸ்டாலின் அதிரடி!!

0
எம்.எல்.ஏ கு.க.செல்வம் இடைநீக்கம் 
எம்.எல்.ஏ கு.க.செல்வம் இடைநீக்கம் 

சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜக தலைவர்களை டெல்லிக்கு சென்று சந்தித்த வந்ததாக வந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியானதால் எம்.எல்.ஏ. கு.க.செல்வம் வகித்த பதவி மற்றும் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்துவிட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

எம்.எல்.ஏ கு.க.செல்வம் இடைநீக்கம் 

திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜக கட்சி தலைவர்களை டெல்லி சென்று நேரில் சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன் கொரோனா பரவலால் உயிரிழந்தார் அவரது மறைவுக்கு பின் அவர் இருந்த மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு கு.க.செல்வம் வர வேண்டும் என ஆசைப்பட்டார் ஆனால் அந்த பொறுப்பின் பதவிக்கு சிற்றரசு பொறுப்பேற்றார். மாவட்ட செயலாளர் பதவியை கிடைக்காததால் எம்.எல்.ஏ கு.க.செல்வம் ஏமாற்றம் அடைந்தார்.

எம்.எல்.ஏ கு.க.செல்வம் இடைநீக்கம் 
எம்.எல்.ஏ கு.க.செல்வம் இடைநீக்கம்

இதை மனதில் கொண்டு திமுகவில் இருந்து பாஜகக்கு மாற இருப்பதால் நேற்று டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை கு.க.செல்வம் சந்தித்து பேசியுள்ளார். பின் செய்தியாளர்களை சந்தித்த செல்வம் நன் பாஜகவில் சேரப்போவதாக வந்த தகவலை நன் மறுக்கிறேன். தொகுதி மேம்பாட்டுக்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்திக்க வந்ததாகவும் அதனை அடுத்து ஜேபி நட்டா வையும் சந்தித்ததாகவும் கூறினார். நான் பாஜகவில் இணைய உள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி வதந்தியே என்றும் எனது ஆயிரம் விளக்கு தொகுதி கீழ் இருக்கும் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திக்கு இரண்டு லிப்ட் வசதிகள் வேண்டும் என்பதற்காக பியூஷ் கோயலாய் சந்திக்க வந்தேன்,

எம்.எல்.ஏ கு.க.செல்வம் இடைநீக்கம் 
எம்.எல்.ஏ கு.க.செல்வம் இடைநீக்கம்

மேலும் தமிழ் கடவுள் முருகனை இழிவாகப் பேசியவர்கள் மீது நடவடிக்கையும் அவர்களை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்றும் குக செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார் என் மீது திமுக நடவடிக்கை எடுத்தால் அதை சந்திக்க தயாராக உள்ளேன் என எம் எல் ஏ கு க செல்வம் கூறினார். இது பற்றி திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியதாவது- கு.க.செல்வம் அவர்கள் கட்சிக்கும் கழகதீர்க்கும் அவப்பெயர் ஏற்படுத்தியுள்ளார், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு வருவதால் கு க செல்வத்தை கட்சி பொறுப்பிலிருந்து கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கிவிட்டதாக முக ஸ்டாலின் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here