Sunday, May 5, 2024

சூடுபிடிக்கும் கேரள தங்க கடத்தல் வழக்கு – ஸ்வப்னா ராணிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!!

Must Read

கடந்த ஒரு ஆண்டு காலமாக தங்க நகை கடத்தல் மேற்கொண்ட தங்கராணி சொப்னா, சந்தீப் நாயர் ஆகியோருக்கு நீதிமன்றம் வரும் 21 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

தங்க கடத்தல்:

கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் உள்ளது, ஐக்கிய அரபு அமீரக தூதரகம். இங்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு விலக்கு உள்ளது. இங்கு தூதரத்துக்கு தனியுரிமை உள்ளது, இதனை பயன்படுத்தி, கடந்த ஒரு ஆண்டாக தூதரகத்தின் பெயரை சொல்லி தங்கக்கட்டிகளை கடத்தி வந்துள்ளார், அதுவும் அதிகாரிகளின் துணையோடு.

தல அஜித்தின் இரண்டு படங்கள் ஹிந்தியில் ரீமேக் – ரசிகர்கள் குஷி!!

Kerala gold smuggling case - Swapna Rani
Kerala gold smuggling case – Swapna Rani

இப்படியாக நடந்து வந்தது, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அதிகாரிகள் ஒரு நாள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சரக்கு விமானத்துக்கு தூதரகத்தின் பெயரில் வந்த பார்சல் ஒன்றை தூதரக அதிகாரிகள் முன் பிரித்து சோதனை மேற்கொண்டுள்ளனர், அதில் 30 கிலோ தங்கக்கட்டிகள் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

சூடுபிடித்த விவகாரம்:

இப்படி அதிகாரிகள் பறிமுதல் செய்த தங்கக்கட்டிகளை விடுவிக்குமாறு மந்திரி அலுவலகத்திலிருந்து கேட்டுக்கொள்ளப்பட்டது என்று தகவல்கள் வெளியாகியது, இதனால் இந்த விவகாரம் சூடுபிடித்தது. இந்த கடத்தலில் ஈடுபட்டு இருந்த 13 க்கும் மேற்பட்டவர்களை அதிகாரிகள் இதுவரை கைது செய்துள்ளனர்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

அதில், முக்கியமாக ஈடுபட்டவர்களான, ஸ்வப்னா ராணி அவரது கூட்டாளி சந்திப் நாயர் உள்ளிட்டவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், நீதிமன்றம் இவர்களுக்கு ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், இவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -