ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகள் இயங்காது – சங்க தலைவர் அறிவிப்பு!!

0

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள ஆகஸ்ட் மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் & டீசல் பங்குகள் இயங்காது என பெட்ரோலிய வணிகர் சங்க தலைவர் அறிவித்து உள்ளார்.

முழு ஊரடங்கு:

தமிழகத்தில் இன்று முதல் சில தளர்வுகளுடன் 7ம் கட்ட ஊரடங்கு (அன்லாக் 3.0) அமலுக்கு வருகிறது. இதனால் தனியார் நிறுவனங்களில் அதிக ஊழியர்கள் பணிபுரிதல், கடைகளை திறந்து வைக்க கால அவகாசம் உள்ளிட்ட சில தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் சில மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு உத்தரவு எவ்வித தளர்வுகளும் இன்றி அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆகஸ்ட் மாதத்தில் வங்கி விடுமுறைகள் – முழு விபரங்கள் இதோ!!

இதனால் அரசின் உத்தரவின் படி ஞாயிற்றுக்கிழமை தொழில் நிறுவனங்கள் இயங்காது. இன்று கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த பெட்ரோலிய வணிகர் சங்க தலைவர் முரளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகள் இயங்காது எனவும், நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்சுகள், அத்தியாவசிய தேவை வாகனங்களுக்கு மட்டும் எரிபொருள் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here