தல அஜித்தின் இரண்டு படங்கள் ஹிந்தியில் ரீமேக் – ரசிகர்கள் குஷி!!

0

அஜித் நடித்த இரண்டு படங்களை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

ஹிந்தியில் ரீமேக்காகும் அஜித் படங்கள்..!

பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அவர் காலடி எடுத்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தற்போது அஜித்தின் அடுத்த படமான வலிமை படத்தையும் தயாரித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்தினை இயக்கிய ஹெச் வினோத் தான் வலிமை படத்தினையும் தற்போது இயக்கி வருகிறார்.

இந்நிலையில் போனி கபூர் அஜித் நடித்த வாலி மற்றும் வரலாறு ஆகிய படங்களை பார்த்து வியந்ததாகவும் அந்த படங்களை இந்தியில் ரீமேக் செய்ய விரும்பி அதன் ரீமேக் உரிமைகளை தற்போது வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

பாலிவுட் உரிமை பற்றிய செய்தி வெளியாகி இருப்பது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அது பற்றி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்தி ரீமேக் படத்தின் நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் தேர்ந்தெடுக்கும் பணிகள் தற்போது நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சுஷாந்த் சிங்கிற்கு நீதி வேண்டும்- சகோதரி பிரதமருக்கு கடிதம்!!

போனி கபூர் தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் வலிமை படம் ஒருபுறமிருக்க, தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் வக்கீல் சாப் என்ற படத்தினை அவர் தயாரித்து வருகிறார். தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் உருவான பிங்க் படக் கதையை தான் தெலுங்கில் வக்கீல் சாப் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here