Monday, April 29, 2024

சென்னை உட்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!!

Must Read

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி:

சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.

அதிகபட்ச மழை பெய்த மாவட்டங்கள்:

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

தாமரைப்பக்கம்,  திருவள்ளூர் 10 செ.மீ , பந்தலூர் நீலகிரி 9செ.மீ , தேவலா நீலகரி, பாலவிடுதி கரூர் தலா 8செ.மீ , சின்னக்கல்லார் கோவை, அதனக்கோட்டை புதுக்கோட்டை தலா 7செ.மீ , அய்யனவராம் சென்னை, பொன்னேரி திருவள்ளூர், அரக்கோணம் ராணிப்பேட்டை, துவக்குடி திருச்சி, வால்பாறை கோவை தலா 6செ.மீ , சோழவரம் திருவள்ளூர், பெரம்பூர் சென்னை, பஞ்சப்பட்டி கரூர், பெருங்கலூர் புதுக்கோட்டை, சின்கோனா கோவை தலா 5 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. வெப்பநிலையைப் பொறுத்தவரை அதிகப்பட்ச வெப்ப நிலை 32 டிகிரி குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

காற்று வீசும் திசைகள் மற்றும் வேகம் குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

  • ஆகஸ்ட் 01 முதல் 02 வரை தென்தெற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
  • மேலும் கேரளா, கர்நாடகா லட்சதீவு, மாலத்தீவு மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
  • ஆகஸ்ட் 03 முதல் 05 வரை தென்தெற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்திலும்,மேலும் கேரளா, கர்நாடகா லட்சதீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
  • ஆகஸ்ட் 04 முதல் 05 வரை அந்தமான், தெற்கு , வடக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

RCB அபார வெற்றி.. டேவிட் வார்னரின் சாதனையை சமம் செய்த விராட் கோலி!!

IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 46 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -